துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்….!

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி உடல்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றது. அந்த சூழலில் அதிக அளவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டால், மேலும் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அன்றாடம் நம் வீட்டு சமையலில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை வழிகளில் பின்பற்றினால் ஆரோக்கியமான உடலமைப்புகள் மற்றும் மனதளவிலும் ஏராளமான நன்மைகளையும் பெறலாம். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதித்த பின்னர், அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

சளித்தொல்லை

சளி அடிக்கடி அதிகமாக பிடிப்பவர்களுக்கு, துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடித்து வந்தால், அதில் உள்ள சத்துகள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தொல்லையால் ஏற்படும் தேக்கத்தைக் குறைத்து, அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பானத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

சிறுநீரகம்

துளசி மற்றும் மஞ்சள் கலந்த இயற்கையான பானத்தில் அதிக சத்துகள் இருப்பதால், இது சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாக வைத்து, சிறுநீரக கற்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மனஅழுத்தம்

துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது….

மலச்சிக்கல்

துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.

அசிடிட்டி

துளசி நீரில் மஞ்சளை கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

அல்சர்

இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது.

செரிமானம்

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன நிறைவுடன் சாப்பிடலாம்…..

தலைவலி

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுக்கிறது.

புற்றுநோய்

இயற்கை பானத்தை தினமும் குடித்தால், இதில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பலரையும் தாக்கும் பல்வேறு புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால்

துளசி நீரில் மஞ்சளை கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைக்கிறது. தேவைப்படும் அளவிற்கு பனை கருப்பட்டி அல்லது பனை கல்கண்டு சேர்த்து கொள்ளவும்.

இதையும் படிக்கலாம் : சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *