சிறுநீர் பாதை தொற்று அறிகுறி? அதை தடுக்கும் வழிகள்..!

சிறுநீர் நோய் தொற்று ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. சுமார் ஐந்தில் ஒரு பெண், ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகிறார். பெரும்பாலும் இந்நோய் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது.

சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர்ப்பாதைத் தொற்று என்பது சிறுநீரகப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோயாகும். சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகக்குழாய், ஆகிய பகுதிகளில் பாக்டீரியா எனப்படும் தீநுண்மம் தாக்குவதால் சிறுநீர்ப்பாதைத் தொற்று ஏற்படுகிறது.

இந்நோய்த் தொற்றானது சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதியில் (சிறுநீர்ப்பையில்) ஏற்படில் இதனை ‘சிறுநீர்ப்பைத் தொற்று’ எனப்படுகிறது. இது ஆரம்பநிலையாகும். மேல்பகுதியில் ஏற்படின் ‘சிறுநீரகத் தொற்று எனவும்’ அழைக்கப்படுகிறது.

ஈக்கோரியா கோலி எனும் பாக்டீரியா தாக்குவதால் பொதுவாகச் சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்படுகிறது. சில நேரங்களில் பிற தீநுண்மங்களாலும் பூஞ்சைகளாலும் ஏற்படலாம்.

பெண்களின் உடற்கூறு, பாலியல் உறவு, நீரிழிவு, உடற்பருமன், குடும்பத்தில் யாருக்கேனும் இத்தொற்று பாதித்திருத்தல் ஆகியவை சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளாகும். பாலியல் உறவு இந்நோய்க்கான மிகத் தீவிரக் காரணியாக இருந்தாலும் பாலியல் மூலம் பரவும் தொற்றுநோயாக சிறுநீர்ப்பைத் தொற்று வகைப்படுத்தப்படவில்லை.

சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படின் அதனைத் தொடர்ந்து சிறுநீரகத் தொற்றும் ஏற்படுகிறது. இது இரத்தம் மூலம் பரவும் தொற்றினால் கூட ஏற்படலாம்.

தோல் அல்லது மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை பாதிக்கும் போது ஏற்படுகிறது. நோய்த்தொற்றுகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட காணப்படுகின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த தொற்று ஏற்படலாம்.

சிறுநீர் பாதை தொற்று அறிகுறிகள்

 • சிறுநீர் கழிக்கையில் வலி
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
 • சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்
 • அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு காய்ச்சல்
 • அடிவயிற்று வலி
 • சிறுநீர் துவாரம் எரியும்.
 • சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்
 • குமட்டல் மற்றும் வாந்தி
 • குளிர் மற்றும் நடுக்கம்
 • அதிக அளவு சிறுநீர் கழிப்பது
 • கீழ் முதுகிலும், பின்புறத்தின் பக்கத்திலும் வலி
 • அதிக அளவு சிறுநீர் கழிப்பது

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க

 • தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • சிறுநீரை அடக்குதல் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே சிறுநீரை அடக்காதீர்கள்.
 • அவசர அவசரமாக சிறுநீர் கழிக்கக் கூடாது. ஏனெனில் இது சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக்குவதைத் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
 • பிறப்புறுப்பு பகுதியில் ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
 • பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.
 • பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க  வேண்டும்.
 • புரோபயாடிக்குகளை உட்கொள்ளுங்கள். அவை UTI யை  தடுக்க உதவுகின்றன.

இதையும் படிக்கலாம் : சிறுநீரகம் செயலிழக்க வைக்கும் உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *