கணபதியின் திருநாமங்கள்

எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது வழக்கம்.
கணபதி என்ற சொல்லில் உள்ள “க” என்னும் எழுத்து ஞானத்தையும், “ண” என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், “பதி” என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.

பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

கணபதியின் திருநாமங்கள்

ஸூமுகன் – மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் – பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் – யானைக்காது உடையவன்
லம்போதரன் – பெரிய வயிறு உடையவன்
விகடன் – மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் – தடைகளுக்கு அரசன்
விநாயகன் – தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது – தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் – பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் – நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் – யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் – வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன்-முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் – அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் – கந்தவேளின் அண்ணன்

இதையும் படிக்கலாம் : 32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *