மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் தோஷம் நீங்குமா

vittil mayil iraku vaithal tosham neenguma

மயில் முருகப்பெருமானின் வாகனம் என்பதால் அதன் இறகு புனிதமாக கருதப்படுகிறது. முருகன் கோவில்கள் மற்றும் காவடி எடுக்கும் பொழுது மயிலிறகு தான் பயன்படுத்துவார்கள்.

பல்வேறு சிறப்புக்கள் கொண்ட மயிலிறகுகள் வீட்டில் வைத்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் எட்டு எண்ணிக்கையில் மயில் இறகை வைத்தால் வாஸ்து குறைபாடுகள் நீக்கும்

மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் சக்திகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு வீட்டின் வாஸ்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் மயில் இறகுக்கு தனிப்பங்கு இருப்பதாக ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் போதும்.

இதையும் படிக்கலாம் : எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம் தெரியுமா?

இதனை வீட்டின் பூஜை அறையில், ஹால் ரூமில் வைக்கலாம். பூஜை அறையில் எட்டு இறகு சேர்த்து ஒரு வெள்ளை துணியால் அல்லது வெள்ளை நூலில் கட்டி “ஓம் சோமாய நமஹே” என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பது போன்று தோன்றினால் வாசற்படியில் இதனை வைக்கலாம். குறிப்பாக இதனை வைப்பதன் மூலம் பூச்சிகள் வீட்டில் தங்காது. இந்த இறகை பார்த்தால் அதற்கு ஏதோ பார்த்து கொண்டே இருப்பது போன்று தோன்றும் என்பதால் அந்த பக்கமே தலை வைத்து கூட இருக்காது என்றே கூறலாம். வீட்டின் அலமாரி, பணப் பெட்டி வைக்கும் இடத்தில் வைத்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *