தினமும் ஏன் பழங்கள் உண்ண வேண்டும் தெரியுமா?

நம் உணவின் பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்கியம் மேலும் பசியை போக்க பழங்களையே உணவாக உண்ணலாம். பழங்கள் வயிற்றை வெகு நேரம் பசிக்காமல் வைத்திருப்பதோடு உடல் எடையை பராமரிக்கவும் அவை உதவுகிறது.

நாம் உண்ணும் ஒவ்வொரு பழமும், உடலிற்கு பல நன்மைகள் கொடுக்கின்றன. இங்கே சில பழங்களும் அவற்றின் பயன்களும் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்ற பழமொழி நம் அனைவருக்கு தெரியும்.

ஆப்பிளில் உள்ள வைட்டமின் C உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். நரம்புகளின் ஆரோக்யத்திற்கும் மற்றும் உடல் எடை குறைய, கெட்ட கொழுப்பை அகற்றவும் ஆப்பிள் உதவுகிறது. மேலும்

ஆப்பிள் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துகளிலிருந்தும் நம்மை காப்பாற்றுகிறது.

வாழைபழம்

வாழைபழம் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அளவு அதிகரித்து, வெகு நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது.

இப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் உடலின் சர்க்கரை அளவை தக்க வைத்துக் கொள்ள உதவும். பசிப்பது போல் தோன்றினால், வாழைபழம் உண்பது மிகச் சிறந்தது.

ஆரஞ்சு

ஆரஞ்சுபழத்தில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்கும். ஆரஞ்சுகளில் வைட்டமின் A நிறைந்த காரோடினாய்ட் உள்ளது. இந்த வைட்டமின் கண்களில் உள்ள ம்யூகஸ் சவ்வு ஆரோக்யமாக இருக்க உதவுகிறது. வயது சம்பந்தப்பட்ட கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

தர்பூசணி

உலகில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசிணியில் 92% நீர் சத்து இருப்பதால் நாள் முழுவதும் உடலை நீர் சத்துடன் வைத்திருக்க உதவும்.

ஒரு பவுல் தர்பூசணி பழத்தில் வெறும் 46 கலோரிகளே உள்ளன. மேலும் இப்பழம் ஒரு எதிர்மறை கலோரி உணவு ஆகும். இது உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பழம் ஆகும்.

அன்னாசி

அன்னாசி பழத்தில் பிரோமெலான் என்னும் நொதி (enzyme) உள்ளது. இந்த நொதி தொண்டை வலி, கீல் வாதத்தினால் உண்டாகும் வீக்கம் மற்றும் கட்டிகளை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதனால் தான் அன்னாசி பழம் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

திராட்சை

திராட்சை நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் நன்மை தருகிறது. திராட்சையில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.

இப்பழம் நம் உடலின் இரத்த குழாய்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை உடல் முழுவதிலும் மேம்படுத்துகிறது.

திராட்சையில் உள்ள தாவர ஊட்டச் சத்துக்கள் நம் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பதால் முதுமை தள்ளிப்போடப் படுகிறது. மேலும் திராட்சை உடல் எடை குறைப்பு, எடை சமாளிப்பு, மூளையின் ஆற்றலை அதிகப்படுத்துதல், மூளையின் செயல்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் உதவுகிறது.

செர்ரி பழம்

செர்ரி பழம் நரம்புகளை அமைதிப்படுத்துகின்றன. இவற்றில் உள்ள மெலடோனின் உடலினுள் இயங்கப்படும் கடிகாரத்தை முறைபடுத்தி தூங்கும் மற்றும் துயிலெழும் நேரங்களை சரி செய்கிறது.

இதன் மூலம் கிடைக்கும் நல்ல, அமைதியான, இடையூறு இல்லாத தூக்கம் போன்றவை சருமத்திற்கு பொலிவும், முதுமையில்லாத தன்மையும் அளிக்கின்றன.

செர்ரி பழமானது இதய ஆரோக்யத்தை மேம்படுத்தி, ஆரோக்கிய கூந்தல் அளித்து, உடலின் இரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவி செய்கிறது.

நீல பெர்ரி பழம்

நீல பெர்ரி பழத்தில் ஃபிளாவனாய்டுகள் என சொல்லப்படும் அந்தோசியனின்கள் மிக அதிக அளவில் உள்ளன. இவைதான் அந்த பழங்களுக்கு நீல நிறத்தை அளிக்கின்றன.

நீல பெர்ரி பழங்களில் கொலஸ்ட்ரால் கிடையாது. நம் உடல் நலத்திற்கு தேவையான நார் சத்து, பொட்டாஷியம், போலேட், வைட்டமின் C, வைட்டமின் B6 மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளன.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்ய வைட்டமின் C மிகவும் முக்கியம். கொலாஜன்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் விரிவு தன்மைக்கு மிகவும் அவசியம்.

கொலாஜன்கள் குறைவாக இருந்தால் முதுமையான தோற்றத்திற்கும், சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகும்.

ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பதால் நம் சருமத்திற்கு முதுமை அகற்றும் தன்மை உண்டாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள பழங்களில் தினசரி ஏதவாது ஒரு பழமாவது சாப்பிட்டு வர முயற்சி செய்யுங்கள். அதனால் நாளடைவில் உண்டாகும் மாற்றங்களை காண முடியும்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *