ஆன்மிக தகவல்கள்

aanmika thakavalkal

இறைவனை அடைய ஒரு மனிதனுக்கு மனத்தூய்மை கட்டாயம் வேண்டும். உங்களிடம் மனதூய்மையும் இருந்தால் எண்ணங்களும், செயல்களும் தானாகவே நல்லனவாக இருக்கும். எனில் துன்பங்களும் நீங்கி இன்பம் பெருகுவது சுலபமாக ஆகிவிடும் அல்லவா? இப்பதிவில் வாழ்க்கையில் அவசியமான ஆன்மிக தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மிக தகவல்கள்

இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நதிகளில் குளிக்கக்கூடாது. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்த நேரத்தில் குளிக்கக்கூடாது. (கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை).

அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது. சுத்தமான இடத்தில் தான் ஜபிக்கவேண்டும்.

கற்பூர ஹாரத்தி (சூடம்காண்பித்தல் பற்றி)

சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்க வேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்

  • விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
  • விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
  • பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

இதையும் படிக்கலாம் : பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும்..!

கலசத்தின் அா்த்தங்கள்

  • கலசம்(சொம்பு) − சரீரம்
  • கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
  • கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
  • கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
  • கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
  • கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
  • கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
  • உபசாரம் − பஞ்சபூதங்கள்.

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

  • சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்
  • வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
  • ஆனி – தேன்
  • ஆடி – வெண்ணெய்
  • ஆவணி – தயிர்
  • புரட்டாசி – சர்க்கரை
  • ஐப்பசி – உணவு, ஆடை
  • கார்த்திகை – பால், விளக்கு
  • மார்கழி – பொங்கல்
  • தை – தயிர்
  • மாசி – நெய்
  • பங்குனி – தேங்காய்.

திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும். அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

வாரம் ஒருமுறை சிவாலயம் சென்று நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி நந்தி தேவரின் காதில் சென்று மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்களது உள்ளம் நாளடைவில் தூய்மை பெற்றுவிடும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை.

இதையும் படிக்கலாம் : சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *