அமாசோம அமாவாசை

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வரும் நாளை அமாசோம வாரம் என்று சாஸ்திரம் கூறுகிறது. அன்று அரச மரத்தை வழிபடுவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று ஞான நூல்கள் விவரிக்கின்றன. இதற்கு அஸ்வத்த பிரதட்சணம் என்று பெயர்.

அமாவாசை அன்று மக்கள் அதிகாலையில் அரச மரத்தை 108 முறை வலம் வரும்போது, ​​அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயு மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே தான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலையில் குளித்துவிட்டு ஈர உடையில் அரசமரத்தைச் சுற்றி வலம் வந்தால் கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வணங்கி, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

இதையும் படிக்கலாம் : அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *