குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா..?

kulanthaikku mottai adipathu yetharku

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போடவேண்டுமென்பது நமது பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்று.

பொதுவாக அவரவர் குலதெய்வ கோவில்களில் உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளித்து குழந்தைகளுக்கு முதல் முறையாக மொட்டை எடுப்பது நம் சம்பிரதாயமாக கருதப்படுகின்றது. மொட்டையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கமும் பல இடங்களுள் உண்டு.

ஆனால் மொட்டை அடிப்பதன் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

மொட்டை அடித்தல் உருவான கதை

மகாபாரதத்தின் இறுதி நாளான 18 ஆம் நாள் பாண்டவர்களின் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குரு துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் அந்த பிஞ்சு குழந்தைகளை தூங்கும் போதே கொடூரமாக கழுத்தறுத்து கொன்றான்.

அடுத்தநாள் வந்து பார்த்த பாண்டவர்கள் மனம் நொந்து அழுதனர். அப்போது அர்ஜுனன், பிஞ்சு குழந்தைகளை கொன்ற அந்த மிருகத்தை விடமாட்டேன், அவனை கொன்று குவிப்பேன் என்று சபதம் இட்டு அஸ்வத்தாமனை அன்று மாலையே விலங்கிட்டு பாண்டவர்கள் முன்பு நிருத்தினான்.

அப்போது திரௌபதியும், பாண்டவர்களும் நம் குரு துரோணாச்சாரியாரின் மகனை கொல்வது பாவம் என்று நினைத்தனர். ஆனால் அர்ஜுனன் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ணா பகவான், அர்ஜுனரே, உன் கோவம் சரிதான். ஆனால் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ இதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவன் தலையை வெட்டி அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பி விடு. இது அவன் ம ர ண த்திற்கு சமம் என்று கூறினார். அர்ஜுனரும் அவ்வாறே அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பினார்.

மொட்டை அடிப்பது என்பது மரணத்திற்கு சமம் என்பது இந்த கதையில் இருந்து நமக்கு புரிந்திருக்கும்.

எப்போது மொட்டை அடிக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு எப்போதும் ஒற்றைப் படை வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும். 9 மாதம், 11 மாதம் மற்றும் ஒன்று, மூன்று, ஐந்து போன்ற வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்கவேண்டும்.

குழந்தைக்கு மொட்டை போடுவது எதற்கு தெரியுமா?

குழந்தைகள் தாயின் கருவறையில் பத்து மாத காலம் இருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் குழந்தைகள் எந்த விதமான சூழலில் இருப்பார்கள் என்றால் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை கலந்த தண்ணீர் தான் குழந்தைகளை சுற்றி இருக்கும்.

இந்த தண்ணீரில்தான் குழந்தையின் உடல் முழுவதும் ஊறிப்போயிருக்கும். குழந்தையின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த தண்ணீரில் தான் மூழ்கிப்போயிருக்கும்.

உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறுவது எளிது. ஆனால் மயிர்க்கால்களில் தேங்கியிருக்கும் கழிவுகள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது. மொட்டை எடுக்கும் பொழுது மயிர்க்கால்களில் வேர்கள் வழியாக கழிவுகள் அனைத்தும் வெளியேறும். அதற்காகத்தான் இந்த மொட்டை எடுக்கும் சடங்கை நம் முன்னோர்கள் குலதெய்வ வேண்டுதல் என கூறினார்கள்.

குழந்தைக்கு மொட்டை அடிக்க ஏன் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றால், குழந்தையின் தலை பகுதியானது மிகவும் இலகுவாக இருக்கும். அதிலுள்ள உச்சிக்குழி மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் குழந்தையின் தலை பகுதியானது மொட்டைக்கு தயாராக ஒரு வருட காலமாவது வேண்டும்.

இதையும் படிக்கலாம் : கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்..!

மொட்டை அடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தைக்கு மொட்டை போடுவதால் நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்படுகிறது.

குழந்தைக்கு பல் வளர ஆரம்பிக்கும்போது உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். இந்த தருணங்களில் குழந்தைக்கு மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

மொட்டை அடிப்பதால் மண்டைத் தோலில் (ஸ்கால்ப்) உள்ள தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவற்றை நீங்குகின்றன. இதனால் முடி வளர மிகவும் உதவுகிறது.

மொட்டை அடிப்பதால் விட்டமின் டி சத்து எளிதில் குழந்தைக்கு கிடைப்பதால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும்.

குழந்தையின் முடி மிக மெலியதாக இருக்கும். மொட்டை அடித்த பின் முடி திக்காக வளரும்.

முக்கிய குறிப்பு

  • குழந்தைக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் பிளேட், ரேசர் ஆகியவை ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • வெப்ப காலங்கள், மிதமான வெப்ப காலங்களில் மொட்டை அடிக்கலாம்.
  • குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன் உணவுக் கொடுப்பது நல்லது. குழந்தைக்கு காற்று போகும்படியான சௌகரியமான உடைகளை அணிந்துவிடுங்கள்.
  • மொட்டை போட்டவுடன் தலையில் சந்தனம் பூசலாம். இவை எரிச்சலைக் குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *