சித்ரா பௌர்ணமி 2024 எப்போது?

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்ரா பெளர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும். இந்த விரதத்திற்கு ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

சித்ரா பௌர்ணமி என்பது அனைவரும் கொண்டாடும் பண்டிகை. இந்நாளில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். சித்திரை மாதத்தில் வரும் இந்த நாளில் கோயிலின் சக்தி மேலும் வலுவடையும் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று தயிர் சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை தானமாக வழங்குவது மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.

சித்ரா பௌர்ணமி 2024

சித்ரா பௌர்ணமி 2024 ஏப்ரல் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 23 இரவு 7.48 மணிக்கு பௌர்ணமி திதி முடிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *