பசும்பால் சிறந்ததா?எருமைப்பால் சிறந்ததா?

cow milk vs buffalo milk

பசும்பால் மற்றும் எருமை பாலில் உள்ள இந்த முக்கியமான வேறுபாடுகள்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சிலர் விரும்பி குடிப்பதுண்டு சிலர் வற்புறுத்தலுடன் குடிப்பதுண்டு. பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தி அதிகரிக்கும், எலும்புகளுக்கு மிக சிறந்தது.

 உடலுக்கு பாலின் நன்மைகள் பல உண்டு.  பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அடங்கியுள்ளது.  உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுவது பால். உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.

பாக்கெட்டில் கிடைக்கும் பாலைவிட கறந்தப்பால் சிறந்தது.

வேறுபாடுகள் மற்றும் நன்மைகள்

  • மாட்டுப்பாலை விட எருமைப்பாலில் 100 சதவீதம் கொழுப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இது உடல் பருமனாக இருப்பவர்கள் குடித்தால் உடல் எடை மேலும் அதிகரிக்க கூடும்.
  • எருமை பாலில் 11 சதவீத அளவு புரதச்சத்து இருப்பதால் தலை முடிக்கு மிகவும் நல்லது. தலை முடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமைப்பால் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
  • எருமை பால் உடலின் உள்ள உறுப்புகளை சுத்தமாகவும் மற்றும் சத்தாகவும் வைத்துக்கொள்வதுடன் உடலின் வெளி பாகங்களுக்கும் நல்லதாகும். பாலை தொடர்ந்து குடித்துவந்தால் முகம் பளபளக்கும் மேலும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வு பெரும்.
  • பசும்பாலில் 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு. பசும்பாளில் புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரெட் உள்ளது. எருமை பாலை விட கொழுப்பு தன்மை இதில் குறைவு. பசும் பாலில் எளிதில் ஜீரணமாக கூடியது என்பதனால் இதனை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
  • எருமை பாலை நீண்ட நாள் வரை வைத்து பயன்படுத்தலாம், ஆனால் பசும்பாலை 1அல்லது 2 நாள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.
  • எதை குடிக்கலாம் என்றால் இரண்டுமே சிறந்தது தான். பால் என்றாலே ஆரோக்கியம், சத்து, வலிமை ஆகியவை. தங்கள் உடல் தன்மைக்கேற்ப இவ்விரண்டில் எதை வேண்டுமானுள் குடிக்கலாம்.
  •  உடல் பருமனாக இருப்பவர்கள், ஜீரண கோளாறு இருப்பவர்கள், பசும்பாலை மேற்கொள்ளலாம். மேலும் உடல் மெலிதாக இருப்பவர்கள் சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமை பாலை மேற்கொள்ளலாம்.
  • இரண்டுமே  உடலுக்கு ஆரோக்கியமானதா இருக்கும் வண்ணம்  தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி  எடுத்துக்கொள்ளலாம். மேலும் பாக்கெட்பாலிற்கு பதிலாக கறந்த எருமைபால்,  பசும்பால், எடுத்துக்கொள்வது உடலுக்கும் மற்றும் அதனை வளர்ப்பவர்களுக்கு நன்மை அளிப்பதாக அமையும்.

இதையும் படிக்கலாம் : உடல் ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டியவை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *