தீராத நோயில் இருந்து விடுபட தன்வந்திரி மந்திரம்

தினமும் காலையில் எழுந்தவுடன் தன்வந்திரிமந்திரத்தை சொல்லலாம் அல்லது நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும். உங்கள் நோயிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான நேரம் விரைவில் அமையும். தீராத வியாதிகளும் தீரும் எனவும் தனக்கு வியாதியே தீராது என்று குழப்பத்தில் இருப்பவர்களும் மீண்டும் நாம் சரியாக விடுவோம் என்று நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:

தன்வந்திரி மந்திரத்திற்கான பொருள்

எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும் அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வரும் சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும் மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன் எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்குத் தெரியாமல் நீக்குவாயாக

இதையும் படிக்கலாம் : ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *