ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்ரீ ராம ஜெயம் என்று ராம நாமாவை சிந்தித்தால் அங்கே ஸ்ரீ ஆஞ்சனேயபிரபு சகிதமாக நமது சீதாலக்ஷ்மண ராமச்சந்திரமூர்த்தி பிரசன்னமாகி நமது துன்பங்களுக்கு ஒரு முடிவு காட்டுவார்கள்.

ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் அனுமான். ராம நாமாவை சிந்தித்தால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என்று ஈஸ்வரன் கூறுகிறார்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீ ராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கிட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

‘ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா’ என்றே முதலில் உச்சரித்தார் ‘மரா’ என்றாலும், ‘ராம’ என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தானும் தாக்கிக் கொண்டாள். ‘ரமா’ என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா’ என்றால் ‘லட்சுமி’. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும்.

ராமன் என்ற சொல்லுக்கான பொருள் ‘ரா’ என்றால் ‘இல்லை’ ‘மன்’ என்றால் ‘தலைவன்’. இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

முதன் முதலில் ஸ்ரீ ராம ஜெயம் எழுதியவர் யார் ?

ராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்று எழுதிக் காண்பித்தார். அந்த குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டார்.

முதன் முதலில் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை எழுதியவர் அனுமன் தான்! அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராம நாமத்தை பனை ஓலை மற்றும் காகிதத்தில்
எழுதும் பழக்கம் கொண்டனர்.

ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும்.

ராமபாணம் எப்படி இலக்கை நோக்கிப் பாயுமோ, அதுபோல ராமநாமம் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது. நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம். குறைந்தது ஒரு நாளைக்கு 108 முறை எழுத வேண்டும்.

சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் கண்டேன் சீதையை என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது.

பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால் தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது, என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார். ராமர் அவரை ஆரத்தழுவி, அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?, என்றார்.

அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்! என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார். அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள்.

செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்சனை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம், நோய் விலக, ஆரோக்கியம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம், சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி, மனபயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலி தன்மை. எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக ஸ்ரீ ராமஜெயம் எழுத வேண்டும்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய பிறகு அதை இறைவனிடம் சேர்ப்பிக்க எளிய வழி

பலரும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினாலும் அதை கோவிலில் போய் சேர்ப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு வாலாஜா பேட்டையில் உள்ள ‘ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் ஆலயம்’ ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன் படி நீங்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி இந்த வாலாஜா பேட்டையில் உள்ள ‘ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர்’ ஆலயத்திற்கு அனுப்பினால் அவர்கள் அதை இறைவனிடம் சேர்ப்பார்கள்.

கோவிலுக்கு அனுப்ப விரும்புவோர் பின்பற்ற வேண்டிய முறை

ஒரு வெள்ளை காகிதத்தில் உங்கள் கோத்ரம், நக்ஷத்திரம், ராசி, பெயர் மற்றும் பிரார்த்தனையை எழுத வேண்டும். பிறகு A4 ஷீட்டில் ( 10 நம்பர் ) வாங்கி, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவ வேண்டும்.
செல்வ வளம் பெருக பச்சை நிறத்திலும், எதிரி பாதிப்பு, கண் த்ருஷ்டி விலக, செய்வினை நீங்க, சிகப்பு நிறத்திலும், சனி தோஷம், தசா புத்தி, நவக்கிரஹ தோஷம் நீங்க கருப்பு நிறத்திலும், நோய் விலக, ஆரோக்கியம் மற்றும் பொது பிரார்த்தனை நிறேவேற நீல நிறத்திலும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத, சிறந்த பலன் உண்டாகும்.

குறிப்பு

ஒரு குடும்பம் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *