இறைவழிபாட்டில் அர்ச்சிக்கக் கூடாத மலர்கள் எவை

flowers not for poojai

மலர்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணம், வாசம், மென்மை, அழகு என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது.

மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தருவது மலர் ஆகும்.

விநாயகர்

பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.

விஷ்ணு

விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.

சிவன்

சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.

அம்பிகை

அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.

லட்சுமி

லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாம் : தடைகள் நீங்க கணபதி ஹோமம் 

துர்கை

துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.

சூரியன்

சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.

சரஸ்வதி

சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது

பைரவர்

பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *