ஆண்கள் உடலுறவுக்கு முன் சாப்பிடக் கூடாத உணவுகள்

foods not eat intercourse

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் நம் ஆரோக்கியத்தில் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.  சில உணவுகள் ஆரோக்கியம் மட்டுமின்றி உடலுறவையே மோசமான அனுபவமாக மாற்றும்.

இன்று டேட்டிங் இரவு என்றால் உங்கள் துணையை கூட்டிக்கொண்டு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று பின்பு நல்ல ரெஸ்டாரன்ட் பார்த்து சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பலாம் என்று ஆசையோடு இருந்தீர்கள் எனில் ரெஸ்டாரன்டில் ஒரு சில உணவுகளை தவிர்ப்பதால் அன்றைய உடலுறவு எதிர்பார்த்த மகிழ்ச்சியான இரவாக அமையும்.

ஒரு வேலை தவறான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் அன்று முழுவதும் உங்கள் மனதில் வைத்திருக்கும் ஆசைகளை கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் சில உணவுகளால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் துணைக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே உங்கள் துணைவியுடன் மகிழ்ச்சியான இரவை கழிப்பதற்கு திட்டமிட்டால் சில உணவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சாப்பிடக்கூடாத உணவு வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம் இவற்றை தவிர்ப்பது நல்லது.

சீஸ்

சீஸ் வகைகள் பொதுவாக நல்ல உணவு வகைகள் ஆகவே இருக்கின்றது. அதில் அதிகமான கலோரிகள் இருக்கிறது. ஜீரணமாவதற்கு மிகவும் நேரம் எடுக்கக் கூடிய ஒரு உணவு பொருளாக இருக்கிறது.

உடலுறவுக்கு முன் சீஸ் சாப்பிடுவதனால், உடலுறவு சமயத்தில் அசவுகரியம் ஏற்படும். மேலும் உடலில், வயிற்றில் சில வழிகளும் ஏற்படும். சரியாக ஜீரணமாகத தன்மை ஏற்பட்டு அசௌகரியம் ஏற்படும்.

 சீஸ் வகைகளை சாப்பிடுவதினால் அதில் உள்ள லாக்டோஸ் என்பது நிச்சயம் உடலுறவுக்கு ஒரு உதவியாக இருக்காது.

பிரெஞ்சு ப்ரைஸ்

பிரெஞ்சு ப்ரைஸ், உப்பு உணவுகள் மற்றும் அனைத்து வகையான வறுத்த உணவுகளையும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்-கொழுப்பு டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுடன் எதிர்மறையாக வினைபுரிந்து, இனப்பெருக்க பகுதிகளில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.

இத்தகைய உணவுகள் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் செக்ஸ் உந்துதலைக் குறைக்கிறது மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ள ஆண்களுக்கு, இந்த உணவுகள் நீண்ட நேரம் ஆணுறுப்பு விறைப்பு செயல்பாட்டை பாதிக்கும்.

இதையும் படிக்கலாம் : ஆண்களின் விந்தணு உற்பத்தியை தடுக்கும் உணவுகள்

பீன்ஸ்

பீன்ஸ் சம்பந்தப்பட்ட உணவுகளை உறவுக்கு முன்பு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் பீன்ஸில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. அதிலுள்ள இனிப்பு தன்மையானது அவ்வளவு எளிதில் ஜீரணம் ஆகாது.

ஜீரணமாக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் நீங்கள் உடலுறவில் ஈடுபடும் பொழுது அடி வயிற்றில் வலி ஏற்படும். மேலும் வாயு பிரச்சினைகளும் ஏற்படும்.

வாய்வு பிரச்சனைகள் இயற்கையான விஷயமாக இருந்தாலும் அது உடலுறவு சமயத்தில் வெளியேறுவது சற்று சங்கடமான விஷயமாக மாறிவிடும்.

புதினா

வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட புதினாவை மெல்லுவது ஒரு சிறந்த யோசனையாகத் தோன்றினாலும், புதினா செக்ஸ் டிரைவைக் குறைப்பதாக அறியப்படுகிறது. உடலுறவில் ஈடுபடத் தயாரானால், புதினா அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.

ஒரு சில காய்கறிகள்

ஒரு சில காய்கறிகள் உடலுறவுக்கு முன்பு சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, போன்ற காய்கறிகள்.

இவைகளில் உள்ள ஒரு சில காரணி ஆனது வாய்வை உண்டாக்கும். இவைகள் உடலுக்கு மிகவும் நன்மை விளைவிக்கக் கூடிய காய்கறிகளாக இருந்தாலும், உடலுறவு சமயத்தில் இவைகளை சாப்பிடுவது வரவேற்கத்தக்கது அல்ல.

இந்த காய்கறிகளில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்திகள் மிகவும் அதிகமாக உள்ளது. இவைகளை சாப்பிட்ட உடனேயே உடலில் சென்று அவைகள் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் வேலைகளில் ஈடுபடும் போது உடலில் மீத்தேன், கார்பன்டை ஆக்ஸைட், ஹைட்ரஜன், போன்ற வாயுக்கள் வெளிப்படும். இவை உடலுறவு சமயத்தில் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

​பீர்

பீர் குடிப்பதை உடலுறவுக்கு முன் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். இயற்கையாகவே அதில் உள்ள ஒரு காரணியான ஹார்மோன் பிரச்சனைகள் உண்டு பண்ணும். அது நம்மை சோர்வடைய வைத்து விடும். எனவே ஈடுபாட்டுடன் உடலுறவு செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். முக்கியமாக பீரிலிருந்து வெளிவரும் வாசனை, அது பலருக்கும் பிடிப்பதில்லை.

உணவிற்கு பின் பழங்கள்

வயிறு வெவ்வேறு வகையான உணவுகளை ஜீரணிக்க வெவ்வேறு நொதிகளைப் பயன்படுத்துகிறது. உணவுக்குப் பிறகு பழங்களை உட்கொண்டால், பழம் செரிமான செயல்முறை மெதுவாக இருக்கும், இது நெஞ்செரிச்சல், துர்நாற்றம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.

பாப்கார்ன்

மைக்ரோவேவ் பாப்கார்னில் மைக்ரோவேவ் என்ற ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன. இந்த இரசாயனங்கள் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும் அவர்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கும் காரணமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *