பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீட்ரூட் ரத்த கலர்ல சிறிது இனிப்பு சுவையோடு இருக்கும். வேர்க்காய்கறியில பீட்ரூட்டும் ஒன்று. மக்கள் பீட்ரூட்ட விரும்பி சாப்பிடுவாங்க. இதை ஜூஸா சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் அப்படிங்கறது கீழ பார்க்கலாம்.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தாமிரம், ஃபோலேட்,மாங்கனீஸ் மற்றும் குறைந்த அளவு கலோரி நிறைந்து இருக்கிறது.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ரத்த அழுத்த அளவை குறைக்கும்

  • பீட்ரூட் சாற்றில் அதிகளவு நைட்ரிக் ஆக்சைடு இருப்பதால் ரத்த நாளத்தை விரிவுபடுத்தும் மற்றும் ரத்த அழுத்த அளவை குறைக்கும்.
  • பீட்ரூட் ஜூஸை தினமும் குடிக்கிறதுனால ரத்த அளவை கட்டுப்படுத்த முடியும்.

தடகள செயல்திறனை மேம்படுத்தும்

  • பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டாலைன்கள் தடகள செயல் திறனை மேம்படுத்தும்.
  • பீட்ரூட் சாறு கார்டியோஸ்பிரேட்டரி செயல்திறனை அதிகரிக்கிறதுனால சகிப்புத்தன்மை அதிகமாகும் எதனால விளையாட்டு வீரர்களின் செயல் திறனை மேம்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பீட்ரூட் ஜூஸில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி இருக்கறதுனால இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

சருமத்திற்கு நல்லது

  • வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிக்கிறதுனால சருமம் புத்துணர்ச்சி அடையும்.
  • இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன பீட்ரூட் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இயற்கையான நிறமூட்டும் முகவர் இருக்கு. இது வீக்கத்திற்கு வழிவகுக்கும் உடலில் உள்ள அறிகுறிகள் மற்றும் உயிரியல் குறிப்பான்கள் இரண்டையும் குறைக்க கூடியது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றைத் தடுக்க கூடியது. இது பெருங்குடல் புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்க கூடியது. எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிச்சிட்டு வர்றது நல்லது.

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம், இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, இந்த காய்கறியில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது செல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது இரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துகிறது, இதனால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

இதையும் படிக்கலாம் : நோய்களுக்கு நோ சொல்லும் பனங்கருப்பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *