நாக்கை கடிச்சிட்டீங்களா? இதை ட்ரை பண்ணுங்க..!

நாக்கை கடித்து விடுவது தெரியாமல்  நடப்பது உண்டு. பொதுவாக சாப்பிடும் போது தான் அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்படும். நாக்கை இப்படி கடிப்பதால் அந்த இடத்தில் சிலருக்கு வலி அல்லது புண்கள் வரும். சில நேரம் கடுமையான வலி கூட ஏற்படும். அதனால சரியா சாப்பிடவே முடியாது.

நாக்கை கடிக்க காரணம்

  • சாப்பிடும் போது நாக்கை கடித்துக்கொள்வோம்.
  • தூங்கும் போது கடித்துக்கொள்வோம்.
  • மன அழுத்தம் அல்லது பதட்டமான நேரத்தில் கடித்துக்கொள்வோம்.
  • வலிப்பு வரும் சமயங்களில் கடிக்க நேரிடும்.
  • விளையாடும் போது கடித்துக்கொள்வோம்.

நாக்கு கடியை ஆற்ற சில வீட்டு வைத்தியம்

உப்பு நீரில் கொப்பளியுங்கள்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறுது கல் உப்பு சேர்த்து அந்த தண்ணீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.  நாக்கு கடிபட்ட இடத்தில் எதாவது பாக்டீரியா வளர்ச்சி இருந்தால் அதை தடுத்து விடும்.

உப்பில் இருக்கும் ஆன்டி செப்டிக் பண்புகள் அழற்சியை போக்கிவிடும். உப்பு நீரை மவுத்வாஷாகவும் பயன்படுத்தலாம்.

மஞ்சள் பேஸ்ட்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சளை பேஸ்ட் செய்து கடித்த நாக்கில் தடவவும். இது பாதிக்கப்பட்ட பகுதியில் வலியைப் போக்க உதவுகிறது.

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம் வலியை குறைப்பதோடு, நரம்புகளை மரத்துப் போகச் செய்கிறது. இது இரத்த நாளங்களை சுருக்குகிறது. எனவே நாக்கை கடித்து விட்டால் ஒரு சில ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி 10-15 நிமிடங்கள் அப்பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால் வலி குறையும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் பல்வேறு சிகிச்சை நன்மைகளைக் கொண்டுள்ளது. நாக்கை கடித்த இடத்தில் சிறுதளவு கற்றாழை ஜெல்லை தடவலாம். இந்த ஜெல் வலியைப் போக்க உதவுகிறது.

தேன் பயன்படுத்துதல்

தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நாக்கு கடித்த இடத்தில் சிறிதளவு தேனை தடவுவதால் வலி குறையும். தொற்றுநோயை நீக்கும். தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

கெமோமில் டீ ஒத்தடம்

கெமோமில்  டீ ஒத்தடம் நாக்கு கடிக்கு சிகிச்சையளிக்கும். கெமோமில் தேயிலை அழற்சி எதிர்ப்பு மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு கப் கெமோமில் டீயை சூடாக்கி, அதில் ஒரு பருத்தி பந்தை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். வலி குறையும்.

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

  • நாக்கு கடி பட்ட உடன் ரத்தம் வந்தால் பார்க்க வேண்டும்.
  • வலி அதிகமாக இருந்தாலோ காய்ச்சல் அடித்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
  • அழற்சி ஏற்பட்டு இருந்தால் பார்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாம் : பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கா? இந்த பழங்கள் போதுமே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *