கர்பிணிகளுக்கான ஸ்லோகம்

கர்பிணிகளுக்கான ஸ்லோகத்தை தினமும் சொல்வதன் மூலம், குழந்தைகள் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள்.

கர்ப்பிணிகளுக்கு  தன் வயிற்றில் வளரும் குழந்தையின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருக்க பலவிதமான பூஜை, பரிகாரங்களை செய்கின்றன.

கர்பிணிகளுக்கான ஸ்லோகம்

“ஓம் ரக்ஷ ரக்ஷ கணாத்யக்ஷ

ரக்ஷ த்ரைலோக்ய ரக்ஷகம்

பக்தா நாம பயம் கர்த்தா

த்ரதா பவ பவர்ணவத்”

ஸ்லோகம் சொல்லும் முறை

  • கர்ப்பிணிகள் விநாயகர் முன் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
  • இந்த ஸ்லோகத்தை வாசிக்கும் போது கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்.
  • வயிற்றில் வளரும் குழந்தைக்கு கேட்கும் படி ஸ்லோகத்தை சத்தமாக உச்சரிக்க வேண்டும். மனதிற்குள் சொல்வதை தவிர்க்கவும்.
  • 108 முறை ஸ்லோகத்தை உச்சரித்த பிறகு, விநாயகப் பெருமானுக்கு பிரசாதம் வழங்கி, அதை நீங்களே சாப்பிடுங்கள்.
  • இரவில் படுக்கும் முன் இந்த ஸ்லோகத்தை ஒரு முறை பாராயணம் செய்யுங்கள். பிறகு படுக்கையில் கூட இதைச் சொல்லலாம்.

ஸ்லோகத்தின் பலன்கள்

  • பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். அவர்களின் ஆளுமையில் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.
  • கர்ப்பிணிகள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம், பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும்.
  • குழந்தைகள் வலுவாகவும், வளமாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவார்கள்.

இதையும் படிக்கலாம் : கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *