கர்ப்பிணி பெண்கள் உணவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, தாய் சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம். எந்தெந்த உணவுகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்பதை காண்போம்.
பச்சை பால்
பச்சையான பால் மற்றும் பதப்படுத்தப்படாத பால் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் பருகுவது நல்லதல்ல.
இந்த பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சியை தடுத்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
முட்டை
சமைக்காத முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்த கூடும். அதற்கு பதிலாக நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.
பிரஷ் ஜூஸ்
கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சுத்தம் இருக்காது. வேண்டுமானால், வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.
காஃபைன்
கர்ப்ப காலத்தில் காஃபைன் கலந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். இது கருக்கலைப்பு, கருவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் பிறக்கும் போதே குழந்தைகளின் எடை இழப்பு அபாயத்தையும் இது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி அல்லது டீ மட்டும் எடுத்து கொள்வது போதுமானது.
பப்பாளி
பப்பாளியை கர்ப்ப காலத்தில் உட்கொள்வது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. பப்பாளியில் லேடெக்ஸ் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது கருவின் வளர்ச்சியை தடுக்கலாம். மேலும் இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. மிதமான அளவு எடுத்துக் கொள்ளும்போது தாய் மற்றும் குழந்தைக்கு எந்த ஒரு கெடுதலையும் செய்வதில்லை.
முளைகட்டிய பயறு வகைகள்
முளைகட்டிய தானியங்களில் உள்ள லிஸ்தீரியா, சால்மோனெல்லா, இ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை தானியங்களை வேகவைத்து உட்கொள்ளவது மிகவும் சிறந்தது.
கத்திரிக்காய்
கத்திரிக்காய் இதில் உள்ள பைட்டோ ஹார்மோன்கள் மாதவிடாயை தூண்டுகின்றன கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்சனையை தூண்டுகிறது அதிக கத்திரிக்காய் உட்கொள்வதால் கருப்பை சுருங்குவதற்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி அல்லது பாதியாக வேக வைத்து இறைச்சியை சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் கலந்துள்ளதால் கர்ப்பிணிகள் இதை தவிர்ப்பது நல்லது கர்ப்ப காலத்தில் வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும்.
மீன்
மீன்களில் அதிக அளவில் மெர்குரி இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. குறிப்பிட்ட மீனான சுறா, வாள்மீன், ராஜா கானாங்கெளுத்தி மற்றும் ஸ்வார்டுபிஷ் போன்றவைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது. சால்மன் மீனை மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிடலாம்.
ஆல்கஹால்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவதைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.
முக்கிய குறிப்பு
- ஃபாஸ்ட் ஃபுட், பாய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
- அதிக காரம், மசாலா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது, மேலும் இனிப்பு பண்டங்கள், எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- கருவுற்ற பெண்மணிகள் மார்பு பகுதி மற்றும் இடுப்பு பகுதிகளில் இருக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்குவதை தவிர்ப்பது நல்லது.