முருகா என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
மருதமலை முருகனுக்கான அபிஷேகமும் பலன்களும்
அபிஷேகம் |
பலன்கள் |
பசும்பால் | நீண்ட ஆயுள் தரும் |
பசுந்தயிர் | மகப்பேறு வாய்க்கும் |
பஞ்சாமிருதம் | தீர்க்காயுள், வெற்றி தரும் |
நெய் | சுகவாழ்வு, மோட்சம் |
இளநீர் | நல் சந்ததியளிக்கும் |
சர்க்கரை | எதிரியை ஜெயிக்கும் |
நல்லெண்ணை | நலம் தரும் |
பச்சரிசி மாவு | கடன் தீரும் பாபநாசம் |
மஞ்சள் தூள் | நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம் |
திருமஞ்சனத்தூள் | நோய் தீர்க்கும் |
தேன் | சுகம், சங்கீத விருத்தி |
சந்தனம் | அகம், சுவர்க்க போகம் தரும் |
பன்னீர் | சருமம் காக்கும் |
வாழைப்பழம் | பயிர் செழிக்கும் |
மாம்பழம் | செல்வம், வெற்றி தரும் |
திராட்சை | திட சரீரம் அளிக்கும் |
மாதுளை | பகை நீக்கும், கோபம் தவிர்க்கும் |
பலாப்பழம் | மங்களம் தரும் யோக சித்தி |
அன்னம் | விளை நிலங்கள் நன்மை தரும் |
சாத்துக்குடி | துயர் துடைக்கும் |
நார்த்தம் பழம் | சந்ததி வாய்க்கும் |
எலுமிச்சை | யமபய நாசம், நட்புடை சுற்றம் |
திருநீறு | சகல நன்மையும் தரும் |
சந்தாபிஷேகம் | நலம் எல்லாம் அளிக்கும் |
கும்பஜலம் | பிறவிப்பயன் அளிக்கும் |
சொர்ணம் (அ) ரத்னாபிஷேகம் | சகல சவுபாக்கியமும் கிட்டும் |
நன்னீர் | நினைத்தது நடக்கும் |
தேங்காய் துருவல் | அரசுரிமை |
கருப்பஞ்சாறு | ஆரோக்கியமளிக்கும் |
பஞ்சகவ்யம் | தீதழிக்கும் ஆன்ம சுத்தி |
இதையும் படிக்கலாம் : முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்