முருகன் திருப்புகழ் தலங்கள்..!

அருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய “திருப்புகழ்” பாடல்களில் மொத்தம் 209 திருமுருகன் தலங்களில் பாடியதாக அறியப்பட்டுள்ளது. “பாடல் பெற்ற 275 சிவ தலங்கள்” மற்றும் “108 வைணவ திவ்ய தேசங்கள்” சென்று பக்தர்கள் தரிசிப்பது போல், திருமுருகனின் அருள் கமழும் “209 திருப்புகழ் தலங்கள்” சென்று வழிபடுவது ஆகச்சிறந்தது.

அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

திருப்புகழ் தலங்கள்

  • அத்திக்கரை
  • அத்திப்பட்டு
  • அவிநாசி
  • ஆய்க்குடி
  • ஆறு திருப்பதி
  • இஞ்சிகுடி
  • இந்தம்பலம்
  • இரத்னகிரி
  • இராமேசுரம்
  • இலஞ்சி
  • உத்தரகோசமங்கை
  • உத்தரமேரூர்
  • ஊதிமலை
  • எட்டிகுடி
  • எண்கண்
  • எழுகரைநாடு
  • ஒடுக்கத்துச் செறிவாய்
  • கடம்பூர்
  • கதிர்காமம்
  • கநகமலை
  • கந்தனூர்
  • கந்தன்குடி
  • கன்னபுரம்
  • கயிலைமலை
  • கரியவனகர்
  • கருவூர்
  • கழுகுமலை
  • காசி
  • காஞ்சீபுரம்
  • காமத்தூர்
  • காவளூர்
  • கீரனூர்
  • குமரகிரி
  • கும்பகோணம்
  • குருடிமலை
  • குறட்டி
  • குளந்தைநகர்
  • குன்றக்குடி
  • குன்றுதோறாடல்
  • கூந்தலூர்
  • கொங்கணகிரி
  • கொடுங்குன்றம்
  • கொடும்பாளூர்
  • கொட்டையூர்
  • கொல்லிமலை
  • கோசைநகர்
  • கோடி – குழகர் கோயில்
  • கோடைநகர்
  • க்ஷேத்திரக் கோவை
  • சப்தஸ்தானம்
  • சிக்கல்
  • சிங்கை-காங்கேயம்
  • சிதம்பரம்
  • சிறுவை
  • சிவபுரம்
  • சீகாழி
  • சுவாமிமலை
  • செங்குன்றாபுரம்
  • சென்னிமலை
  • சேயூர்
  • சேலம்
  • சோமநாதன்மடம்
  • சோமீச்சுரம்
  • சோலை மேவிய குன்று
  • ஞானமலை
  • தச்சூர்
  • தஞ்சை
  • தனிச்சயம்
  • தான் தோன்றி
  • திரிபுவனம்
  • திருக்கடவூர்
  • திருக்கற்குடி
  • திருக்கழுக்குன்றம்
  • திருக்கானப்பேர்
  • திருக்காளத்தி
  • திருக்குடவாயில்
  • திருக்குரங்காடுதுறை
  • திருக்குற்றாலம்
  • திருக்கூடலையாற்றூர்
  • திருக்கோணமலை
  • திருக்கோவலூர்
  • திருசிராப்பள்ளி
  • திருச்சக்கிரப்பள்ளி
  • திருச்சத்திமுத்தம்
  • திருச்செங்காட்டங்குடி
  • திருச்செங்கோடு
  • திருச்செந்தூர்
  • திருத்தணிகை
  • திருத்தவத்துறை
  • திருத்துருத்தி
  • திருத்துறையூர்
  • திருநல்லூர்
  • திருநள்ளாறு
  • திருநாகேச்சுரம்
  • திருநாவலூர்
  • திருநெய்த்தானம்
  • திருநெல்வாயில்
  • திருப்படிக்கரை
  • திருப்பந்தணை நல்லூர்
  • திருப்பனந்தாள்
  • திருப்பரங்குன்றம்
  • திருப்பராய்த்துறை
  • திருப்பழுவூர்
  • திருப்பழையாறை
  • திருப்பாண்டிக்கொடுமுடி
  • திருப்பாதிரிப்புலியூர்
  • திருப்புக்கொளியூர்
  • திருப்புத்தூர்
  • திருப்பூந்துருத்தி
  • திருப்பூவணம்
  • திருப்பெருந்துறை
  • திருப்போரூர்
  • திருமயிலை
  • திருமயேந்திரம்
  • திருமாகாளம்
  • திருமாணிகுழி
  • திருமாந்துறை
  • திருமுருகன்பூண்டி
  • திருவக்கரை
  • திருவதிகை
  • திருவம்பர்
  • திருவரத்துறை
  • திருவருணை
  • திருவலஞ்சுழி
  • திருவலிதாயம்
  • திருவல்லம்
  • திருவாஞ்சியம்
  • திருவாடானை
  • திருவானைக்கா
  • திருவான்மியூர்
  • திருவாமாத்தூர்
  • திருவாமூர்
  • திருவாரூர்
  • திருவாலங்காடு
  • திருவாவடுதுறை
  • திருவிடைக்கழி
  • திருவிடைமருதூர்
  • திருவிற்குடி
  • திருவீழிமிழலை
  • திருவெஞ்சமாக்கூடல்
  • திருவெண்ணெய்நல்லூர்
  • திருவெழுகூற்றிருக்கை
  • திருவேங்கடம்
  • திருவேட்களம்
  • திருவேற்காடு
  • திருவையாறு
  • திருவொற்றியூர்
  • திருவோத்தூர்
  • திலதைப்பதி
  • தீர்த்தமலை
  • தென்கடம்பந்துறை
  • தென்சேரிகிரி
  • தேவனூர்
  • த்ரியம்பகபுரம்
  • நாகப்பட்டினம்
  • நிம்பபுரம்
  • நெடுங்களம்
  • நெருவூர்
  • பட்டாலியூர்
  • பழநி
  • பழமுதிர்ச்சோலை
  • பவானி
  • பாகை
  • பாக்கம்
  • புகழிமலை
  • புதிய பாடல்கள்
  • புனவாயில்
  • பூம்பறை
  • பூவாளூர்
  • பெரியமடம்
  • பெருங்குடி
  • பெரும்புலியூர்
  • பேரூர்
  • பேறைநகர்
  • பொதியமலை
  • மதுராந்தகம்
  • மதுரை
  • மயிலம்
  • மருத்துவக்குடி
  • மாடம்பாக்கம்
  • மாயாபுரி
  • மாயூரம்
  • முள்வாய்
  • யாழ்ப்பாணாயன்பட்டினம்
  • ராஜகெம்பீரவளநாட்டு மலை
  • ராஜபுரம்
  • வடதிருமுல்லைவாயில்
  • வடுகூர்
  • வயலூர்
  • வயிரவிவனம்
  • வலிவலம்
  • வள்ளிமலை
  • வள்ளியூர்
  • வழுவூர்
  • வாகைமாநகர்
  • வாலிகொண்டபுரம்
  • விசுவை
  • விஜயபுரம்
  • விஜயமங்கலம்
  • பிள்ளையார்பட்டி
  • விராலிமலை
  • விரிஞ்சிபுரம்
  • விருத்தாசலம்
  • வெள்ளிகரம்
  • வேதாரணியம்
  • வேப்பஞ்சந்தி
  • வேப்பூர்
  • வேலூர்
  • வைத்தீசுரன் கோயில்
  • ஸ்ரீ சைலம் திருமலை
  • ஸ்ரீ புருஷமங்கை
  • ஸ்ரீ முஷ்டம்

இதையும் படிக்கலாம் : முருகரின் ஆறுபடை வீட்டிற்கான திருப்புகழ் பாடல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *