ஓமிக்ரான் BA 4 அறிகுறிகள் என்னென்ன?

omicron ba 4 symptoms

ஓமிக்ரான் கொரோனா முதலில் கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, அதிகப்படியான நபர்களுக்கு மிக வேகமாகப் பரவியது.

ஓமிக்ரான் வைரசின் வேரியண்ட்கள் தான் இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.

உலக நாடுகளில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க இந்த ஓமிக்ரான் BA 4 வகை பாதிப்பே முக்கிய காரணமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஓமிக்ரான் கொரோனாவை போலவே இந்த ஓமிக்ரான் BA 4 வகையும் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கடந்த ஜனவரி 10ஆம் தேதி கண்டறியப்பட்டது.

இந்த புரோத ஸ்பைக் மூலம் தான் வைரஸ்கள் மனித செல்களில் தன்னை இணைத்துக் கொள்ளும். BA 4 மற்றும் BA 5 ஓமிக்ரான் வகைகளில் புரோத ஸ்பைக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வேக்சின்கள் இந்த புரோத ஸ்பைக்கை அழிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது உருமாற்றம் அடையும்போது, வேக்சின்கள் பலன் அளிக்க முடியாத சூழலும் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த BA 4 ஓமிக்ரானை உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய நோய்த் தடுப்பு மையம் கவலைக்குரிய கொரோனா வகைகளாக அறிவித்துள்ளன.

அறிகுறிகள்

ஒமிக்ரான் BA 4 நோய் ஏற்படுவோருக்குச் சளி ஏற்படுவதே முக்கிய அறிகுறியாக உள்ளது.

சளி, சுவாச பிரச்சினை, மூக்கு அடைப்பு, இருமல், உடல் வலி, சோர்வு ஆகிய முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

ஓமிக்ரானால் பாதிக்கப்படும் பெரும்பாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வைரஸ் பாதிப்பே ஏற்படுகிறது. சுவை மற்றும் வாசனை இழப்பு குறைவாகவே ஏற்படுகிறது.

இந்த வகை கொரோனா முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்றாலும் கூட, இவை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

அதேநேரம் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது இது கடைசி முறையாக இருக்காது. இந்த வகை தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் வரும் காலத்தில் உருவாகும் புதிய உருமாறிய கொரோனாவும் இதேபோல இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது.

இதையும் படிக்கலாம் : குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *