புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கன்னி ராசியில் புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலியாகவும், சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள். மேலும் இவர்களிடம் ஆன்மிக குணம் நிறைந்து இருக்கும்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

  • புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திகூர்மையாக இருப்பார்கள். செல்வம் செழிப்போடு இருப்பாங்க இவங்களுக்கு பண கஷ்டம் வராது.
  • புதன் அறிவுக்கான கடவுளாக இருப்பதால், புரட்டாசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை பல நூல்களையும் கற்று மிகவும் அறிவாளியாகவும், தத்துவங்கள், விளக்கங்கள் சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • புரட்டாசியில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விசயத்திலும் தலையிட மாட்டார்கள் எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர்.
  • பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ நினைத்ததை சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.
  • அதிகம் டென்சன் பேர்வலி இதனால் தலைவலி அதிகமாகும். நேர்முக எதிரிகள் இருக்க மாட்டாங்க. மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிப்பார்கள்.
  • இந்த மாதத்தில் பிறந்தவர்களின் குணத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.  ஆனால் மற்றவர்களின் சிந்தனை செயல்முறையை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  • நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். இயற்கையை ரசிக்க கூடியவர்கள். சுவையாக சமைத்து சாப்பிடுவார்கள்.
  • இவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயமரியாதையை ரொம்ப பார்ப்பார்கள். ஒரு முறை வாக்களித்தால் அவர்கள் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். வெளிப்படையாக பேசும் இவர்கள் உறவினர்கள், சுற்றத்தார்களுடன் அனுசரித்து வாழ்வார்கள்.
  • இவர்களின் புத்திசாலித்தனத்தால் எந்த தொழிலிலும் சிறப்பாக வருவாய் ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். பத்திரிகைதுறை, நகை, ஜவுளித்துறை, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், நூல் பதிப்பு, நிதி, நீதி துறைகளில் கொடிகட்டிப்பறப்பார்களாம்.

இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *