ரம்ஜான் பண்டிகை, உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
இஸ்லாமியர்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் தலை பிறை தோன்றியதும், முக்கிய கடமையாகிய நோன்பு எடுத்து, தங்கள் புலனடக்கத்தையும், மன கட்டுப்பாட்டையும் உருவாக்குகிற சிறந்த ஆன்மிக பயிற்சி என்றும் கூறலாம். ஒரு மாத காலம், அவர்கள் தங்கள் பசியையும் தாகத்தையும் கட்டுப்படுத்தி, ஏழைகளின் பசி மற்றும் தாகத்தைப் புரிந்துகொள்வதற்கான கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். சக மனிதர்களின் பசியைப் போக்குவதை விட மேலான தர்மம் வேறென்ன? ஆனால் இதைச் செய்ய, நன்கொடையாளர்கள் முதலில் பசி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அல்லது தானம் இருமாப்புடன் கூடியதாக மட்டுமே இருக்கும். எனவேதான் இந்த நோன்பு நாளை பசி, தாகம் அறியும் நாட்களாக பயன்படுத்த வாய்ப்பு உருவாக்கி கொடுக்கிறது. ஏழைகளுக்கு தேவைகளை அறிந்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்விக்கும் மனப்பாங்கை நோன்பு உருவாக்கி கொடுக்கிறது.
நோன்பின் கடமையை நிறைவேற்றிய பிறகு, ரம்ஜான் (ஈத்) கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் பெயர். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வழிபாட்டுத் தலங்களிலும், திறந்த வெளி பொது இடங்களிலும் ஒன்றாகத் தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஈகை திருநாள் என்றால் என்ன?
ரம்ஜான் பண்டிகையை ஈகை திருநாள் (ஈத் அல் பித்ர் – Eid al-Fitr) என்று அழைக்கிறார்கள். இந்த ஈத் அல் பித்ர் என்பது சில நேரங்களில் ‘ஈத்’ என்று சுருக்கப்பட்டு அழைக்கப்படுகிறது.
ஈத் அல்-பித்ர் என்பதுரமலானின் முடிவைக் கொண்டாடும் ஒரு முஸ்லிம் பண்டிகை. அதேபோல் ஈத் என்றால் அரபு மொழியில் “பண்டிகை” என்று பொருள். மேலும் ஈத் அல்-பித்ர் என்றால் ‘நோன்பு திறக்கும் பண்டிகை’என்று பொருள். ரமலான் நோன்பு மாதத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் அதாவது ஈகை திருநாள் வருகிறது. அதனால் தான் ரம்ஜான் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஈகைத் திருநாளில் சிறப்புப் பிரார்த்தனைகளுக்குப் பிறகு, இறைவனின் திருநாமத்தில் பலியிடுவது சிறப்பு. வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு மூன்று பாகங்களாகப் பிரித்து, ஒரு பகுதியைத் தங்கள் நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும், மூன்றாவது பகுதியைத் தங்கள் தேவைக்காகவும் பயன்படுத்துகின்றனர். புது ஆடைகள் உடுத்தி, சுவையான பிரியாணி தயாரித்து, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவேற்று, அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
இதையும் படிக்கலாம் : ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள்