மாதவிடாய் சுழற்சி தாமதம் ஆவதற்கான காரணங்கள்..!

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி ஆனது ஒவ்வொரு 21 முதல் 40 நாட்களுக்கும் இருக்கலாம். உடல் மாற்றங்களை கடந்து செல்லும் போது, அது மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாற்றுகிறது. இந்த காலகட்டத்திற்கு மேல் மாதவிடாய் தாமதமாகிவிட்டால், அது சில மெடிக்கல் கண்டிஷன்களின் அறிகுறியாக இருக்கலாம்.

கர்ப்பமாக இருப்பது மாதவிடாய் தவறியதற்கான ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும் கூட பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பிற காரணிகளும் இங்கே உள்ளன. தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் முதல் மன அழுத்தம் வரை மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. பொதுவான காரணங்கள் – ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முதல் தீவிர மருத்துவ நிலைகள் வரை செல்கிறது.

மாதவிடாய் சுழற்சி தாமதத்தின் காரணங்கள்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்): பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ‘மேல் ஹார்மோன்’ ஆன ஆண்ட்ரோஜன் உங்கள் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையாகும். இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன, இது மாதவிடாயை ஒழுங்கற்றதாக மாற்றும். இதை சரிசெய்ய சுழற்சியைக் கட்டுப்படுத்த சரியான மருத்துவரை அணுகவும்.

நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் எனப்படும் ஹார்மோனை செயல்படுத்துகிறது, இது மாதவிடாய் தாமதத்திற்கு அல்லது தவறவிடுவதற்கு வழிவகுக்கும்.

தூங்கும் நேரத்தில் மாற்றம், நைட் ஷிப்டுகளுக்கு மாறுவது அல்லது வேறு நேர மண்டலத்திற்கு பயணம் செய்வதும் கூட மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.

உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், திடீரென அதிகமான  உடற்பயிற்சி செய்தால், அது ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க வழிவகுக்கும், இது மாதவிடாயை பாதிக்கலாம்.

உடல் எடையில் ஏற்படும் மாற்றம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். உணவுக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள், எடையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகின்றன, பெரும்பாலும் இந்த இரண்டும் தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.

பெரிமெனோபாஸ் பாதிப்பிற்குள் உள்ளாகும் பெண்கள் முதலில் சந்திக்கும் பிரச்சனை மாதவிடாய் நிறுத்தம் தான். இதன் கீழ் அரிதாகவோ அல்லது தாமதமாகவோ மாதவிடாய்களை அனுபவிக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவதாலேயே மாதவிடாய் சுழற்சி தாமதமாகிறது அல்லது ஒழுங்கற்றதாக மாறுகிறது.

இதையும் படிக்கலாம் : பெண் கருவுறாமைக்கான காரணங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *