சூரியதோஷம் உங்களுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்? அதற்கான பரிகாரம் என்னவென்று பார்ப்போம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுமுறையில் நன்மை தீமைகளை ஏற்படுத்தக்கூடியவர். அரசாங்கம், அரசியல் துறை அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறைகள் அனைத்தும் சூரியனோட அமைப்பே காரணம். உங்கள் ஜாதகப்படி அல்லது தசாபுக்தியின்படி சூரியனுடனான ஏற்பாடு சரியாக இல்லாவிட்டால், தந்தைவழி உறவில் ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில், தலை, கண், வயிறு மற்றும் இரத்தம் போன்றவற்றில் மாற்றங்கள், பித்தம் அதிகரிப்பு போன்றவையும் ஏற்படும். சட்ட விரோதமான நபர்களின் மிரட்டல், அரசுவழி அனுமதி பெறுவதில் தாமதம், சிலருக்குத் திருமணம் செய்வதில் தாமதம், இந்த பிரச்சனைகள் அனைத்தும் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரிய தோஷத்தால் ஏற்படுகிறது.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? உங்களுக்கு சூரிய தோஷம் இருந்தால், அனுமன் கோயிலுக்கு தவறாமல் சென்று வழிபடுங்கள். தாமிரத்தால் செய்யப்பட்ட இஷ்ட தெய்வ டாலர் அல்லது அனுமன் டாலர் அணியுங்கள். ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில், உங்கள் வீட்டின் பூஜை அறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது தவிடு வாங்கிக் கொடுங்கள். ஒவ்வொரு நாளும் சூரியனைத் துதிக்கும் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமான் சாலீசா துதிகளை கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள் அல்லது மாணிக்கங்களால் ஆன விநாயகப் பெருமானை வழிபடவும். புகழ்பெற்ற ஹனுமான் கோவிலுக்கு தவறாமல் சென்று, தரிசனம் செய்யவும், முடிந்தவரை கோதுமையில் (சூரிய தானியம்) செய்யப்பட்ட இனிப்புகளை தானம் செய்யவும். சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையைத் தொடங்குங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இந்த விஷயத்தில் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
சூரிய துதி
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி
இதையும் படிக்கலாம் : சூரியன் மந்திரம்..!