சித்ரா பெளர்ணமி

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சித்ரா பெளர்ணமி தினம் இந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. சித்ரா பெளர்ணமி தினத்தன்று வீட்டில் சிரத்தையுடன் வழிபட்டால் கடன் தொல்லைகள் மற்றும் வீட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் பெரியோர்கள்.

சித்ரா பெளர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இந்த விரதத்திற்கு ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் உண்டு. மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

சித்திரை மாதத்தில் சித்ரா நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடும் நாளே சித்ரா பௌர்ணமி. இந்திரன் பாப விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாதரைத் தரிசித்து பாப விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ரா பௌர்ணமி. மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் கால் பதிக்கும் நாளே சித்ரா பௌர்ணமி.

சித்ரகுப்தன்

புராணங்களின்படி, சித்ரா பௌர்ணமி என்பது சித்ரகுப்தரின் பிறந்த நாளாகும். பார்வதி தேவி ஒரு அழகிய ஓவியத்தைப் பார்த்து, அந்த ஓவியத்தை உயிர்ப்பிக்க சிவபெருமானிடம் வேண்டினாள். சிவனும் தன் சுவாசத்தால் உயிர் கொடுக்கிறார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியில் பிறந்ததால் “சித்ரகுப்தன்” என்று அழைக்கப்படுகிறார். இவர் எமதர்மராஜாவின் எழுத்தர்.

சந்திரன் சித்ரா நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பௌர்ணமி நாளில் அம்மனை வழிபட்டால் செவ்வாயின் ஆற்றல் நீங்கும். தாய் கிரகமான சந்திரன், தந்தை கிரகமான சூரியனிடமிருந்து வெப்ப ஒளியைப் பெற்று பூமியை நோக்கி குளிர்ந்த ஒளியை வெளியிடுகிறது. சந்திரன் மிகவும் பிரகாசமாகவும், குறைபாடற்றதாகவும், மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் ஒளிர்கிறது. அதனால் தான் அன்று அவர்கள் ஆற்றங்கரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டனர்.

சித்ரா பௌர்ணமி அன்று தான் சந்திரன் அந்த சக்திமிக்க ஒளியை கொடுக்கிறது. விஞ்ஞான ரீதியாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல். சந்திரன் மனதுக்காரகன் ஆதலால் மனபலம் கூடுகிறது.

காஞ்சிபுரத்தில் ராஜவீதியில் சித்ரகுப்தர் கோயில் இருக்கிறது. இக்கோயில் கயிலாச நாதர் கோயிலுக்கும் வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கும் இடையில் அமைந்திருப்பதே ஒரு குறிப்பு என்பார்கள் அடியவர்கள். அதாவது, அவரவர் செய்யும் பக்திக்கு ஏற்ப கயிலாயத்துக்கோ வைகுண்டத்துக்கோ அனுப்பி வைப்பவர் சித்ரகுப்தர் என்கிறார்கள். அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது கையில் எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் கொண்டவர் சித்ரகுப்தர் என்று சுட்டப்படுகிறார். கர்ணாம்பாள் இவரது மனைவியின் பெயர். காஞ்சிபுரம் கோயிலில் இவர் கர்ணாம்பாள் சமேதராகக் காட்சி கொடுக்கும் உற்சவ மூர்த்தி உள்ளது. கர்ணம் என்றால் கணக்குப்பிள்ளை என்பார்கள். கர்ணத்தின் மனைவியாதலால் இவரைக் கர்ணாம்பாள் என்கிறார்கள்.

சித்ரா பௌர்ணமி விரதம்

சித்ரா பௌர்ணமி அன்று வீட்டைச் சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து, அரிசி மாவில் சித்ரகுப்தரின் படத்தை வரைந்து கை, பேனா வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். உப்பு சேர்க்காத உணவுகளை உண்ணுங்கள்.

சித்ரா பவுர்ணமியான அன்று மாலையில் பவுர்ணமி உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெள்ளைப் பொங்கல் தலைவாழை இலையில் படைக்க வேண்டும். பாசிப் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். படையலுடன் அனைத்து காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை செய்து ஏழைகளுக்கு உங்களால் இயன்ற தானம் செய்யுங்கள். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுகள் வழங்கலாம். கொடுப்பது மிகவும் நல்லது. இதனால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

நவக்கிரக கேதுவின் தேவதை ‘சித்ரகுப்தர். எனவே கேதுவினால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் மன குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள் சத்ரு துன்பங்கள் நீங்கும். சித்ராபௌர்ணமி விரதம் இருந்தால் நவக்கிரக தோஷங்கள்,பாவ விமோஷனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கும். தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது.

சித்ரா பௌர்ணமி 2024

சித்ரா பௌர்ணமி 2024 ஏப்ரல் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. ஏப்ரல் மாதம் 22-ம் தேதி மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஏப்ரல் 23 இரவு 7.48 மணிக்கு பௌர்ணமி திதி முடிகிறது.

சித்ரா பௌர்ணமி சிறப்புகள்

இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

சித்ரா பௌர்ணமி என்பது அனைவரும் கொண்டாடும் பண்டிகை. இந்நாளில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். சித்திரை மாதத்தில் வரும் இந்த நாளில் கோயிலின் சக்தி மேலும் வலுவடையும் என்பது நம்பிக்கை.

எனவே, இந்நாளில் கோவில்களுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வுகள் வந்து நம் வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை. கோயில்களுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டின் பூஜை அறையையே கோயிலாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்யலாம். சித்ரா பெளர்ணமிக்கு செய்யும் பூஜை மற்ற நாட்களை விட பல மடங்கு வீரியம் அதிகம்.

இந்த சித்ரா பெளர்ணமி நாளில் மிக முக்கியமான வழிபாடு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் வழிபாடு ஆகும்.

சித்ரா பெளர்ணமி தினத்தன்று இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக கொடுக்க வேண்டும். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், மகிழ்ச்சியும், குதூகலமும் குடிகொள்ளும்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும்.

சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 23, 2024 செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. இந்த திருவிழாவில், பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவது தங்கள் பாவங்களை கழுவுவதை அடையாளப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சித்ரா நதியில் வழக்கமாக உள்ளது. மற்ற ஊர்களிலும் இந்த திருவிழா நடைபெறுகிறது.

இதையும் படிக்கலாம் : பவுர்ணமி தின அபிஷேக பலன்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *