கரும்புள்ளி மறைய சூப்பரான டிப்ஸ்

கரும்புள்ளி மறைய சூப்பரான டிப்ஸ்

ஒரு தேக்கரண்டி தேனுடன், சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து கலக்கவும். அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும். பின்னர் 5 நிமிடம் கழித்து ஈரமான துண்டு வைத்து எடுக்கவும். இப்படி தொடர்ந்து செய்ய விரைவில் கரும்புள்ளி நீங்கும்.

ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவுடன், ஒரு தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கவும். அந்த பேஸ்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும். பின்னர் 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

சிறிதளவு ஓட்ஸ் உடன் சில துளி தண்ணீரை கலக்கி பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும். அந்த பேஸ்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காயவிடவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

1 டேபிள் ஸ்பூன் உப்பை சிறிய அளவு நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பால் – ஒரு டீஸ்பூன் , மஞ்சள் பொடி – 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேவையான அளவு. இவை மூன்றையும் ஒன்றாக கலந்துகொண்டு முகத்தில் குறைந்தது 15 நிமிடம் ஃபேஸ் பேக் போடவும். வாரத்தில் 3 முறை இதுபோன்று செய்துவந்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கொஞ்சம் பப்பாளி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மையும் குறைந்துவிடும். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வந்தாலே போதும் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அதிகப்படி நீர் உடலுக்கு தேவை அதே நேரம் பராமரிப்பு என்னும் முறையில் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக மறையும்.

பருக்கள் கட்டிகள் போன்று இருந்தால் அதனுடன் வேப்பிலையையும் சேர்த்து அரைத்து தடவலாம். இதனால் முகப்பருக்களுக்கு பின்பு அந்த இடத்தில் தழும்புகள் இருக்காது.

வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்தமல்லியுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, காயவைத்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

முகத்தில் இருக்கும் அசிங்கமான கரும்புள்ளிகள் நீங்க, கோதுமை மாவுடன் பால் சேர்த்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் விரைவில் மறைவது கண்கூடாக தெரியும்.

முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

முட்டைகோசுடன், பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

குறிப்பு

முகத்தின் மிருதுதன்மை மறைவதுதான் எல்லோருக்கும் பிரச்சனை. சருமத்தில் இருக்கும் அழுக்குகள் சரும துவாரங்களை விட்டு நீங்காமல் வரும் போது முகத்தில் கடினமும், இறுக்கமும் அதிகமாகிறது.

அதை குறைக்க மாதம் ஒரு முறை தவறாமல் முகத்துக்கு நீராவி பிடிப்பது நல்லது.நீராவி பிடிக்கும் போது அதில் புதினா இலை சேர்த்து பிடிக்கலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகிறது.

முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்படுவதால் முகம் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *