சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2023 வழிபாட்டு நேரம்

கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியைப் பூஜை செய்து வழிபாடு செய்யும் நாளாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நம் தொழிலில் முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்களுக்கு மரியாதை கொடுத்து வழிபாடு செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜை அன்று நம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.

சரஸ்வதியின் படத்திற்கும், பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

சரஸ்வதியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும்.

நெய்வேத்தியமாக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை, பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து சூடம் ஏற்றி தீபாராதனை காட்ட வேண்டும். பின் விபூதி, குங்குமம் மற்று பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2023 வழிபாட்டு நேரம்

நவராத்திரியின் 9 நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அக்டோபர் 23ஆம் நாள் திங்கட்கிழமையும், விஜயதசமி அக்டோபர் 24 ஆம் நாள் செவ்வாய்கிழமையும் வருகிறது.

  • ஆயுத பூஜை செய்ய அக்டோபர் 23 ஆம் தேதி பகல் 12.30 முதல் 2 மணி வரை நல்ல நேரம்.
  • சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம்.
  • விஜயதசமி பூஜை செய்ய அக்டோபர் 24 ஆம் தேதி காலை 7.45 முதல் 8.45 மணி வரை;  காலை: 10.45 முதல் 11.45 மணி வரையிலும் பூஜை செய்து வழிபடலாம்.

இதையும் படிக்கலாம் : சரஸ்வதி 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *