இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள் என கூற கேட்டிருப்போம். ஏன் அது போன்ற கனவுகள் வருகிறது, அதற்க்கு என்ன அர்த்தம் என தெரியாமல் குழம்பி போவார்கள். இது போன்ற கனவுகள் ஏன் வருகிறது, அதற்க்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

 • இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.
 • இறந்த உறுப்பினர் கனவில் தொடர்ந்து வந்தால், அவரது ஆன்மா அலைந்து திரிகிறது என்று அர்த்தம்.  எனவே அவருடைய பெயரில் ராமாயணம் அல்லது ஸ்ரீமத் பகவத் கீதை வாசிக்கவும்.
 • இறந்து போனவர்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.
 • இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.
 • இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.
 • தான் இறந்துவிட்டது போல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 • இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
 • இறந்தவர்கள் நம்முடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.
 • இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் நமக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.
 • நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
 • நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.
 • இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
 • இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
 • இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
 • உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள்.
 • நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
 • இறந்த நபரின் ஆவி எதாவது ஒரு பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.
 • இறந்த குடும்ப உறுப்பினர் கனவில் அழுவதைக் கண்டால், இந்த கனவு நல்லதாகும்.
 • இறந்த உறவினர்கள் பசியுடன் காணப்பட்டால், உடனடியாக ஏழைகளுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை வழங்குங்கள்.
 • இறந்தவர் கனவில் மகிழ்ச்சியாகத் தோன்றினால், அவர் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார் என்று அர்த்தம். மேலும், அத்தகைய கனவு நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறுவதையும் குறிக்கிறது.
 • சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
 • இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
 • இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.
 • குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
 • இறந்த மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு வந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அப்படி இல்லாமல், அவளின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகி விடும்.

இதையும் படிக்கலாம் : குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *