கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.
இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற்போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது.
பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.
தர்பூசணிப்பழச்சாறு
தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.
அத்திப்பழச்சாறு
அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும்.
அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்.
ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சை சாறு
திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.
ஆரஞ்சு சாறு
தொண்டையில் புற்றுநோய் வந்து எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு ஆரஞ்சுசாறு அருமையான மருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை சிறிது சிறிதாக குடித்து உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை குடிப்பவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, சாதாரண காய்ச்சல் குணமாகும்.
ஆரஞ்சு சாறுடன் இளநீர் கலந்து குடித்தால் சிறுநீர் கோளாறு ஏற்படாது. குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சை சாறு
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தோ அல்லது வெல்லம் கலந்தோ ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் என கலந்து குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து வந்தால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை குடிக்கும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீர்
இளநீருடன் கலந்து குடிப்பதால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து குடித்தால் மலேரியா நோய் குணமாகும். எலுமிச்சை சாறுடன் வெள்ளை வெங்காயம், கற்பூரம் சேர்த்து குடித்தால் காலரா குணமாகும்.
உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்-வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
தக்காளி சாறு
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலையில் சாப்பிட்டால் உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். இந்த சாறுடன் தேன் கலந்து குடித்தால் ரத்தம் சுத்தமாகும்.
தோல் நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்ப டுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகமான சத்து தக்காளியில் கிடைக்கும்.
வயிற்று வலியை விரட்ட
உடலுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம். உடலில் உள்ள நீர் நன்கு வெளியேற காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். சருமத்திற்கு தொல்லை தரும் கார உணவுகள், எண்ணெயில் செய்யும் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இவற்றை தவிர்த்தால் அஜீரண கோளாறு ஏற்படாது.
வெயில் காலத்தில் உடல் சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலியை விரட்ட ஒரு கப் ஜவ்வரிசியில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் பால், சர்க்கரை அல்லது உப்பு, மோர் ஊற்றி கரைத்து குடிக்கலாம். கோடை காலத்திற்கு ஏற்றது சைவ உணவுதான். அசைவ உணவு சாப்பிட்டால் உடல் சூட்டைக் கிளப்பி விடும். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படும்.
சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும். இதனால் கோடைக் காலங்களில் இம்மாதிரியான உணவுகளை குறைத்துக் கொண்டால் நம் உடல் நலமாக இருக்கும். பெரும்பாலும் வெயிலில் வெளியே போகும்போது தலையில் தொப்பி அணிந்து கொள்ளலாம். கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாம் : கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்..!