கோவில் கோபுரம் – கோ+புரம் என்று பிரிக்க வேண்டும். கோ என்றால் இறைவன். புரம் என்றால் இருப்பிடம். இறைவனின் இருப்பிடமே கோபுரம். இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். மேலும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள்.
கோவில் | உயரம் | இடம் |
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் | 236 அடி | ஸ்ரீரங்கம் |
அண்ணாமலையார் கோவில் | 217 அடி | திருவண்ணாமலை |
பெருவுடையார் கோவில் | 216 அடி | தஞ்சாவூர் |
ஆவுடையார் கோவில் | 200 அடி | புதுக்கோட்டை |
ஆண்டாள் கோவில் | 193 அடி | ஸ்ரீவில்லிப்புத்தூர் |
ஏகாம்பரநாதர் கோவில் | 192 அடி | காஞ்சிபுரம் |
காசி விஸ்வநாதர் கோவில் | 180 அடி | தென்காசி |
கங்கைகொண்ட சோழபுரம் | 174 அடி | அரியலூர் |
சாரங்கபாணி சுவாமி கோவில் | 173 அடி | கும்பகோணம் |
மீனாட்சியம்மன் கோவில் | 170 அடி | மதுரை |
ராஜகோபாலசுவாமி கோவில் | 154 அடி | மன்னார்குடி |
நடராசர் கோவில் | 135 அடி | சிதம்பரம் |
தாணுமாலயன் கோவில் | 134 அடி | சுசீந்திரம் |
ஜம்புகேசுவரர் கோவில் | 128 அடி | திருவானைக்கா |
ஆதி கும்பேசுவரர் கோவில் | 128 அடி | கும்பகோணம் |
சுப்பிரமணிய சுவாமி கோவில் | 127 அடி | திருச்செந்தூர் |
இராமநாதசுவாமி கோவில் | 126 அடி | இராமேஸ்வரம் |
சங்கரநாராயணர் கோவில் | 125 அடி | தென்காசி |
தியாகராஜர் கோவில் | 118 அடி | திருவாரூர் |