தீமையை நீக்கும் திருப்புகழ்..!

சிறுவாபுரி முருகப்பெருமானை மனமுருகி வேண்டிக் கொண்டு, எல்லாக் கஷ்டங்களும், நஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கப் பிரார்த்திக்க வேண்டும்.

வேல் இரண்டெனு நீள்விழி மாதர்கள்
காதலின் பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் – விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்

வேசி என்பவ ராமிசை மோகிகள்
முது நெஞ்சழி ஆசையி லேஉழல்- சிறியேனும்
மால யன்பர னார்இமை யோர்முனி
வோர் புரந்தரன் ஆதிய ரேதொழு

மாத வம்பெறு தாளினை யேதின- மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாய்அடி யேன்இடர்- களைவாயே

நீல சுந்தரிகோமளி யாமளி
நாடகம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சமி சூலினி மாலினி- உமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ

காம சுந்தரி யேதரு பாலக!
நீர்பெரு ருஞ்சடை யாரருள் தேசிக!- முருகேசா
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநில ங்கள் எலாநிலை யேதரு

ஆய னந்திரு வூரக மால்திரு- மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதில்
ஆல யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய- பெருமாளே

இவ்வுலகில் உள்ள அனைவரும் நிலையான வாழ்வு வாழவும், ஏழு உலகங்களும் நிலைபெறட்டும், உலகை காக்கின்ற திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும் திருமால் மருகோனே உயர்ந்த பொன் (ஆடகம்) கோபுரங்களும், பெரிய மதில்களும் பல வீதிகளும் நிறைந்து உள்ள அழகிய தென் சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருக பெருமானே என்று மனமுருகி இந்த திருப்புகழை ஓதும் போது, இன்றைய சூழலில் நமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள், கஷ்டங்கள், தேக்கங்கள், தடங்கல்கள், வில்லங்கங்கள், விக்கினங்கள், நஷ்டங்களை நினைவில் கொண்டு மனமுருகி முருகனை பிரார்த்தித்து, அவை நம்மை விட்டு தொலைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாம் : சிறுவாபுரி முருகன் வேல் 108 போற்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *