திருப்பதி சென்றால் வாழ்க்கையில் திருப்பம் ஏன் தெரியுமா..?

திருப்பதி சென்றால் வாழ்க்கையில் திருப்பம்

திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் கிடைக்கும் என்பது ஐதீகம். இது விஞ்ஞான பூர்வமான உண்மையான விசியம் கூட. இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள் தான். சந்திரன் கதிர்களை அதிகளவில் ஈர்த்து கொள்வதால் தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும். ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார். அவற்றின் சக்தி கடல் அளவு என்பர்.

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும்.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

இதையும் படிக்கலாம் : நவதிருப்பதி ஸ்தலங்கள்..!

குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல ஆரம்பிக்கின்றன.

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால், தளர்ந்து நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா, அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் என்னவெனில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது. ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து நம் வேண்டுதலை செய்யலாம். ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது. மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்.

இனிமேல் நாம் திருப்பதி சென்றால், அங்கு அமைதியாக, கடவுளை நினைத்து நம் வேண்டுதலை சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *