தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 36வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • விளாத்திகுளம்
  • தூத்துக்குடி
  • திருச்செந்தூர்
  • திருவைகுண்டம்
  • ஓட்டப்பிடாரம்(தனி)
  • கோவில்பட்டி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
17 ஆவது

(2019)

7,00,373 7,24,912 116 14,25,401
18 ஆவது

(2024)

7,08,234 7,39,710 215 14,48,159

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
2009 திமுக எஸ். ஆர். ஜெயதுரை
2014 அதிமுக ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி
2019 திமுக கனிமொழி

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஆர். ஜெயதுரை வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக எஸ். ஆர். ஜெயதுரை 3,11,017
அதிமுக சிந்தியா பாண்டியன் 2,34,368
தேமுதிக எம். எசு. சுந்தர் 61,403

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி 3,66,052
திமுக பி. ஜெகன் 2,42,050
மதிமுக எஸ். ஜோயல் 1,82,191

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக கனிமொழி 5,63,143
பாஜக தமிழிசை சௌந்தரராஜன் 2,15,934
அமமுக மருத்துவர் எம். புவனேஷ்வரன் 76,866

இதையும் படிக்கலாம் : தென்காசி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *