காசநோய் அறிகுறிகளும் சிகிச்சைகளும்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும் நோய்களில் காசநோயும் ஒன்று. மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) நுண்கிருமியால் வரக்கூடிய இந்த நோய், பரம்பரை நோயல்ல. இதைப் பொதுவாக டி.பி (TB) என்றே அழைக்கிறோம். TB என்பது `Tubercle bacillus’ அல்லது ‘Tuberculosis’ என்பதன் சுருக்கமே.

TB எனப்படும் இந்நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காச நோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது. பெரும்பாலனவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.

உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள். காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காச நோய் ஏற்படுகிறது.

காசநோய் வரலாறு

காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.  சுமார் 10000 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டுள்ளது. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.

இன் நோயை ஏற்படுத்தும் நோய்க்கிரிமியை றொபேட்கொச் என்பவரால் 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது.

காசநோயின் வகைகள்

 • லேட்டன்ட் காசநோய்
 • ஆக்ட்டிவ் காசநோய்

லேட்டன்ட் காசநோய்

இந்த நிலையில், கிருமிகள் உடலில் இருக்கும். ஆனால், நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றை உடம்பில் பரவ விடாது. மேலும், எந்த விதமான அறிகுறிகளையும் அனுபவித்திருக்க மாட்டார்; மற்றும் தொற்றும் பரவி இருக்காது. ஆனால் கிருமிகள் எந்த நேரத்திலும் செயலில் இருக்கக்கூடும்.

குறிப்பாக சில காரணங்களால் நோயெதிர்ப்பு அமைப்பு சமரசம் செய்யப்படும் போது. எச்.ஐ.வி அல்லது வேறு எந்த நீண்ட கால தொற்றுநோயும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை பலவீனப்படுத்தும்.

ஆக்ட்டிவ் காசநோய்

இந்த நிலையில், கிருமிகள் பெருகும், மேலும் அறிகுறி ஏற்படும். ஆக்ட்டிவ் காசநோய் உள்ள ஒருவர் தொற்றுடன் இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, 90 சதவீதம் ஆக்ட்டிவ் காசநோய் தொற்று, லேட்டன்ட் காசநோயில் இருந்து வருகிறது.

காசநோயின் அறிகுறிகள்

 • தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்.
 • சளியுடன் இரத்தம் வெளியேறல்
 • நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோயறிகுறிகளும் காணப்படும்.
 • இரவு நேரக் காய்ச்சல்.
 • உடல் நிறை குறைவடைதல்
 • உணவில் விரும்பமின்மை
 • இரவு நேரத்தில் வியர்த்தல்
 • களைப்பாகக் காணப்படல்
 • சோர்வு மற்றும் பலவீனம்

காச நோய் ஏற்பட காரணம் என்ன?

காச நோய் ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. எந்த மனிதர் வேண்டுமானாலும் காச நோயால் பாதிக்கப்படலாம். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன. இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும்.

ஒருவரின் உடலில் சென்ற காச நோய் கிருமி காச நோயை ஏற்படுத்தாது. உடலில் செயல் இழந்த காசநோய் கிருமி உள்ளோர் உடனே நோய்வாய்படுவதில்லை. அவர்களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது செயலிழந்து இருக்கும் காசநோய் கிருமிகள் செயல்படத் தொடங்கிவிடும். ஆகவே தான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

காசநோய் பரவும் விதம்

 • காசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது இருப்பதனால்,
 • இருமும் போதும்
 • தும்மும் போதும்
 • கதைக்கும் போதும்
 • எச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.

ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது. எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.

காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்

 • காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்
 • எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
 • புகைப்பிடிப்பவர்கள்.
 • போசாக்கு குறைபாடு உடையோர்.
 • சனநெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள்.
 • காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
 • மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.

காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்

 • சளி பரிசோதனை
 • மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
 • மாண்டோ (MANTOUX) பரிசோதனை

மேற்கூறிய பரிசோதனைகள் அனைத்தும் அரசு காசநோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் உள்ளன. சளி நுண்ணோக்கிப் (SPUTUM MEROSCOPIC) பரிசோதனை திருத்தப்பட்ட தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்ட (RNTCP) மையங்களில் செயல்படுகிறது.

காசநோய் சிகிச்சை

எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை, காச நோய் வகையின் அடிப்படையில் மருத்துவர் தீர்மானிப்பர். முழுமையான சிகிச்சை மற்றும் இந்த நோயின் மறுபிறப்பைத் தடுக்க, ஆறு முதல் 12 மாதங்களுக்கு இந்த மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

லேட்டன்ட் காச நோய் இருந்தால், பாக்டீரியாவைக் கொல்லவும், தொற்று செயலில் இருப்பதைத் தடுக்கவும் மருத்துவர் ஒன்று அல்லது பல மருந்துகளை பரிந்துரைப்பார். இந்த மருந்துகள் யாதெனில், ஐசோனியாசிட், ரிஃபாபென்டைன் அல்லது ரிஃபாம்பின் போன்றவை ஆகும். இந்த மருந்துகளை 9 மாதங்கள் வரை எடுக்க வேண்டும்.

செயலில் உள்ள காசநோய்க்கு, மருத்துவர் எதாம்புடோல், ஐசோனியாசிட், பைராசினமைடு மற்றும் ரிஃபாம்பின் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். இவற்றை 6 முதல் 12 மாதங்கள் வரை எடுக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட மருந்துகள் கல்லீரலை பாதிக்கக்கூடும். எனவே காச நோய் சம்மந்தமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது, இது போன்ற முக்கிய உறுப்பு சம்மந்தமாகவும் சிகிச்சை தேவைப்படலாம்.

காசநோய் உணவு முறை

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் காசநோய் தொற்று மற்றும் அதன் மறுபிறவிக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான ஊட்டச்சத்து இல்லாதது கடுமையான காசநோய் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்க, நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை எதிர்மறையாகக் குறைக்கிறது. எனவே, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

உணவில் இரும்பு மற்றும் வைட்டமின் பி சேர்க்க கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள். ரொட்டிகள் மற்றும் முழு தானியங்கள்

கேரட், செர்ரி தக்காளி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் (ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்). வைட்டமின்-சி நிறைந்த உணவுகள்.

காசநோயும் கர்ப்பிணித் தாய்மாரும்

கற்பிணித்தாய்மாராக இருந்தாலும் காசநோய்க்கான மருந்தினை நோய் ஏற்படின் எடுக்க வேண்டும். பாலூட்டும் தாய்மாரும் நோய் ஏற்படின் காசநோய்க்கான மருந்தினை எடுப்பதுடன், குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் அவசியம்.

காசநோயும் எயிட்ஸ் நோயும்

எயிட்ஸ் நோயாளிகளில் 50% மானோர் காசநோய்த் தொற்றாலேயே இறக்கின்றனர். காசநோயாளிகளுக்கு எயிட்ஸ் நோய் வரும் சாத்தியம் இல்லை. ஆனால் எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசநோய் வரும் சாத்தியம் அதிகம் உண்டு எனவே காசநோயாளிகளை எயிட்ஸ் நோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தல் அவசியம்.

காசநோய்க் கிருமி பரவாது பாதுகாக்க

 • நோயாளி இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் ▪ முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
 • கண்ட கண்ட இடங்களில் துப்பக்கூடாது. நோயாளியின்
 • சளியினை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
 • நோயாளி ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டு பூரணமாக உரிய சிகிச்சை பெறப்பட வேண்டும்.
 • நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 • போஷாக்கினை நல்ல நிலையில் பேணுவதுடன் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
 • குளிரூட்டப்பட்ட இடங்களில் காசநோய்கிருமிகள் அதிக நேரம் உயிர் வாழும். எனவே அவ்விடங்களிலும்  சனக்கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் அதிகமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாம் : சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *