ஆரோக்கியமான முறையில் பலர் எடையை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் வருவதால், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டி உள்ளது.
உடல் எடையை குறைக்க, கொழுப்பு மற்றும் நச்சுகள் உடலில் இருந்து அகற்றப்பட வேண்டும். தினசரி உணவுப் பட்டியலில் குறிப்பிட்ட வகை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த வகை உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுகள்
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடையை பராமரிக்கலாம்.
முட்டைகோஸ்
முட்டைகோஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை கரைக்க உதவுகிறது.
கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றி எடை குறைக்க உதவுகிறது.
கீரைகள்
கீரைகளில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
காளான்
காளான்கள் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பையும், கூடுதல் கலோரிகளையும் கரைத்து எடையைக் குறைக்க உதவுகின்றன. காளானை சூப்பாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.
குடை மிளகாய்
குடை மிளகாயில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. 100 கிராம் மிளகாயில் 50 கலோரிகள் உள்ளன.
இதையும் படிக்கலாம் : உடல் எடையை குறைக்கும் சில பானங்கள்..!