அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?

அனுமனின் நினைவாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வானர குலத்தை சேர்ந்த அஞ்சனை மற்றும் கேசரியின் மகனாக அனுமன் அவதாரம் எடுத்தார். அவர் மார்கழி மாத அமாவாசை நாளில் மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

எனவே, தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களும் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வைகாசி மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?

hanuman jayanti 2024

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்கழி மாத அமாவாசை தினமாக ஜனவரி 11 ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 10-ம் தேதி இரவு 08.05 மணி துவங்கி, ஜனவரி 11-ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. அதே நேரம், ஜனவரி 10-ம் தேதி இரவு 07.44 வரை மட்டுமே மூல நட்சத்திரம் உள்ளது. எனவே மார்கழி அமாவாசை தினமே அனுமன் ஜெயந்தி என்பதால், ஜனவரி 11ம் தேதி இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

அனுமன் காயத்ரி மந்திரம்

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி,

தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்”

ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வழிபட எல்லா விதமான நலன்களும் கிடைக்கும்.

அனுமன் ஜெயந்தி விரதம்

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி ராம நாமத்தை ஜபித்து விரதம் இருக்க வேண்டும். அருகில் உள்ள ராமர் அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை, வெற்றிலை மாலை வைத்து வழிபடவும். வசதிகள் இருந்தால் வடை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அன்றைய தினம் வீட்டில் ஆஞ்சநேயரின் படத்தை வைத்து அஷ்டோத்திரம் சொல்லி வெண்ணெய், உளுந்து வடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவற்றைப் படைத்து பூஜை செய்யவும். அன்றைய தினம், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, சுந்தரகாண்டம், அனுமன் காயத்ரி என்று சொல்லி ஸ்ரீராம நாமத்தை வேண்டிக் கொள்ளலாம். ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் சிறப்பான பலனைத் தரும்.

அனுமன் ஜெயந்தி விரதம் இருந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், வாழ்வு வளம் பெறும்.

அனுமனுக்கு மாலை அணிவிப்பதின் பலன்

hanuman jayanti

  • அனுமனுக்கு துளசி மாலை அணிவிப்பதன் மூலம் ஸ்ரீராமர் நல்ல கல்வியையும் செல்வத்தையும் பெற முடியும்.
  • அனுமனை வெற்றிலையால் அலங்கரிப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.
  • வடை மாலை அணிவித்து அனுமனுக்கு தானம் செய்தால் கிரக சக்தி நீங்கி செல்வம் பெறலாம்.
  • அனுமன் மீது வெண்ணெய் ஊற்றினால், வெண்ணெய் உருகும் முன் விரும்பிய செயல் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.
  • அனுமனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்தால் வாழ்க்கையில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
  • அனுமனுக்கு துளசி சாத்தி வழிபடுவதன் மூலம் சனிஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

இதையும் படிக்கலாம் : ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *