தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 7 தொகுதிகள் போக 32 தொகுதிகளில் அதிமுக களம்காண்கிறது. திமுக, அதிமுக இவ்விரு கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
Contents
அதிமுக தேர்தல் அறிக்கை 2024
- மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்துவோம்.
- குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களை உட்படுத்த வலியுறுத்தப்படும்.
- 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
- நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
- மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு ஒதுக்கீடு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
- ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும். ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
- விவசாயிகள் பயன்பெற தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெல் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
- உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- பாலாற்றில் தடுப்பணை கட்டும் அந்திர அரசின் முயற்சிக்கு அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்.
- நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும்.
- காவிரி குண்டாறு வைகை இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்படும். கோவதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- மத்திய அரசின் திட்ட நிதி பகிர்வு 60:40 என்ற விகிதத்திற்கு பதிலாக 75:25 சதவீகிதமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் வருமான வரம்பு மத்திய அரசால் 8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிக்கலாம் : அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024