அனைவரும் மருண்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 30

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅ டிபின்தொ டர்ந்து – பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து – தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் – வசைதீர

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
மலரடி வணங்க என்று – பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த – திருமார்பா

ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
திகிரிவ லம்வந்த செம்பொன் – மயில்வீரா

இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
இறைவகு ககந்த என்று – மிளையோனே

எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
மிமையவ ரையஞ்ச லென்ற – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : இயலிசையில் உசித (திருச்செந்தூர்) – திருப்புகழ் 31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *