தினையின் ஆரோக்கிய நன்மைகள்

தினை சிறு தானியங்களில் முக்கியமான தானியம் ஆகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன் மில்லட்’, ‘ஹங்கேரியன் மில்லட்’ என்று பல வகையாக பிரிக்கிறார்கள்.

தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்’ (Fox Tail Millet) என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும் போது அது நரியின் வால் போல் தெரிவதால் ஆங்கிலேயர்கள் அந்த பெயரை வைத்துவிட்டார்கள்.

தினையின் வரலாறு

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன.

பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை.

பாரம்பரிய மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் தினைக்கு தனி பங்கு உண்டு. தமிழ் இலக்கியங்களில் கூட தினை, உணவு பழக்கத்தில் இருந்ததற்கு நிறைய சான்று உண்டு.

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

தினையில் உள்ள சத்துக்கள்

தினையில் நார்ச்சத்து, வைட்டமின், புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கால்சியம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், பீட்டா கரோட்டின், கனிமச் சத்துக்கள், உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும். கொழுப்பு சத்து சிறிதும் இல்லாத உணவு தினை.

தினையின் ஆரோக்கிய நன்மைகள்

ஆண்மை குறைபாடுகள் நீங்கும்

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாத நிலை ஏற்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தினையை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்

அரிசி உணவுகள் அதிகம் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சர்க்கரை சத்து அதிகம் உள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

எலும்புகள் வலுவடைய

எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்துக்கள் தேவை.

 தினையில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையடையும்.

மன அழுத்தம் போக்கும்

அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை உருவாக்கி மன அழுத்தத்ததை உருவாக்குகிறது.

தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பிரச்சனைகள் தீரும்.

தசைகள் வலுபெற

உடலில் உள்ள தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். தினையில் புரதச் சத்து சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது.

தினை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

  • இதயத் தசைகளை வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.
  • மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும்.
  • வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.
  • தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் காக்கும்.
  • குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக்கும்.
  • மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும்.

தினையை உணவில் சேர்த்துக்கொள்ள சில வழிகள்

தினையை பொங்கல், உப்புமா, களியாகவும், முறுக்கு, கஞ்சியாகவும் செய்து சாப்பிடலாம். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து சாப்பிடலாம். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம். தினை மாவை தேனுடன் கலந்து உருண்டை செய்தும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாம் : ஆண்களின் விந்தணு உற்பத்தியை தடுக்கும் உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *