சுண்ணாம்பின் மருத்துவ பயன்கள்

நம்ம வீட்ல இருக்கிற பெரியவங்க வெற்றிலை பாக்குடன் கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவாங்க. சுண்ணாம்புல கால்சியம் சத்து இருக்கு. இது எலும்புகளை வலிமையாக்கும்.

சுண்ணாம்பை அதிகமா வழிபாடு மற்றும் பிற புனித சடங்குகளுக்கு பயன்படுத்துவாங்க. காரணம் என்னன்னா சுண்ணாம்பில் ஆன்டிசெப்டிக் வலிநிவாரணி, மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கக் கூடியது.

சுண்ணாம்பின் பயன்கள்

  • சுண்ணாம்புல உள்ள நறுமணத்தை சுவாசிக்கிறதுனால மனசோர்வு மற்றும் மன அழுத்தம் குறையும்.
  • சுண்ணாம்பு புகையில இருக்கிற நறுமணத்தை சுவாசிக்கிறதுனால நாள்பட்ட இருமல் காசநோய் மற்றும் மார்பு சளி ஆகிவை குணமாகும்.
  • சுண்ணாம்பு உடல்ல புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் அது மட்டும் இல்லாம புற்றுநோயின் அறிகுறியை குறைக்கும்.
  • விஷ பூச்சி கடிச்சதுனா சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இந்த மூனையும் சம அளவு எடுத்துக்கிட்டு தண்ணீரில் கரைச்சு கடிப்பட்ட இடத்தில் தடவுறதுனால விஷத்தன்மையை நீங்கும்.
  • தேள் கடிக்கு சுண்ணாம்புடன் சிறிது நவச்சாரம் சேர்த்து நசுக்கி அதை தேள் கொட்டிய இடத்தில தடவுறதுனால விஷம் குறைஞ்சிடும்.
  • தொண்டை வலிக்கு இரவு தூங்குறதுக்கு முன்னாடி தேனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவுனோம்னா தொண்டை வலி சரியாயிடும்.
  • வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு இருந்ததுனா சுண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் மூன்றையும் சம அளவு எடுத்து நல்ல மைய அரைச்சு வீக்கம் உள்ள இடத்துல தடவனும்னா சீக்கிரமா சரியாயிடும்.
  • உடம்புல வர கட்டிகள் உடைய சுண்ணாம்பு மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சம அளவு சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவனும்னா கட்டிகள் பழுத்து உடைந்துவிடும்.
  • சுண்ணாம்பு, மஞ்சள் தூள், உப்பு மூனையும் சம அளவு எடுத்து நீரில் கரைச்சு அதை நெத்தியில தடவுனோம்னா தலைவலி போவது மட்டும் இல்லாம நல்லா தூக்கம் வரும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் வெளியேறிடும்.
  • மஞ்ச காமாலை சரியாக அரை லிட்டர் தயிருடன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் காலையில குடிச்சிட்டு வந்தோம்னா மஞ்சள் காமாலை சீக்கிரமா சரியாயிடும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுண்ணாம்ப கலந்துக்கணும் அதுக்கப்புறம் மேல தெளிந்த தண்ணீரை எடுத்து அதோடு தேங்காய் எண்ணெயை கலந்து வெந்நீர் அல்லது நெருப்பினால் ஏற்பட்ட புண் மீது தடவுனா விரைவில் குணமாயிடும்.
  • உமிழ்நீரோடு சுண்ணாம்ப நல்லா கலந்துக்கணும் அதை தொப்புள சுற்றியும், கால் பெரு விரலையும் தடவுனோம்னா நீர் கடுப்பு சரியாயிடும்.

முக்கிய குறிப்பு

அறுவை சிகிச்சை செஞ்சவங்க சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவங்க அதே மாதிரி ஆஸ்துமா உள்ளவங்க எல்லாம் சுண்ணாம்ப பயன்படுத்த கூடாது.

இதையும் படிக்கலாம் : வெற்றிலையின் மருத்துவ குணங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *