சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

seeragam benefits

சீரகம் உணவை சுவையாக மாற்றுவதற்கு மட்டுமல்ல, பல வகையான மூலிகைகளும் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சீரகத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதால் அவை வயிற்றுப் பிரச்சினைக்கு மிகவும் பயனளிக்கின்றன. வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர, சீரகத்தில் பல சிக்கல்களிலிருந்து நிவாரணம் தரும் பண்புகள் உள்ளன. சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இது தவிர, ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றிலும் இது ஏராளமாகக் காணப்படுகிறது, இது வீக்கத்தைக் குறைக்கவும் தசைகளை தளர்த்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

 1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
 2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
 3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
 4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
 5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
 6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
 8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
 9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.
 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
 11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம்நீங்கும்.
 12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.
 13. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
 14. .சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 15. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
 16. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
 17. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 18. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்துவர, நல்ல பலன் கிடைக்கும்.
 19. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகிவர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
 20. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
 21. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
 22. மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 23. சிறிது தனியாவுடன், சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால், அதிகம் மது உண்ட போதை தணியும்.
 24. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

   25. மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது              தடுக்கும்.

 1. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
 2. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
 3. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 4. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

இதையும் படிக்கலாம் : முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *