முகப்பருக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க..!

face pimple tips

முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும்.

தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும்.

எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

சந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் ஆலோசனையின்றி நாமாக மாத்திரை, மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

தலையில் பொடுகுகள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

இரவு படுக்கைக்குப் போகும் போது, வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.

காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.

மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இவையனைத்தும் கடைப்பிடித்தும் முகப்பருக்கள் மறையாமலிருந்தால் அழகு நிலையங்களுக்குச் சென்று முகப்பருக்களை அகற்றிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாம் : முகம் வெள்ளையாக கற்றாழை மாஸ்க் போடுங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *