பிசிஓடியை விரட்டும் எளிய வீட்டு வைத்தியம்

home remedies for pcod pcos

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பிசிஓடி என்பது சகஜமான ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு மாற்றம் மற்றும் வாழ்வியல் மாற்றமே ஆகும். இதை வீட்டிலிருந்தே சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் சரி செய்யலாம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை இலையில் உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுத்து 11 முறை நன்றாக கழுவுங்கள். பின் கழுவிய கற்றாழையை மிக்ஸியில் கொஞ்சம் பனங்கற்கண்டு போட்டு அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீரக தண்ணீர்

சீரகம் என்பதே உடலை சீர் படுத்தும் மூலிகை. அகத்தை சீர் படுத்துவதால் தான் அதற்கு சீரகம் என்று பெயர். 3 மாதத்துக்கு தொடர்ந்து சீரக குடிநீரை குடித்து வந்தால் கர்ப்பப்பை, சினைப்பை மட்டுமல்ல மற்ற பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.

விட்டமின் டி

விட்டமின் டியை உணவுகளிலிருந்து பெறுவதை விட சூரிய வெளிச்சத்தில் எளிதாக கிடைக்கும். இனப்பெருக்க செயல்பாடுக்கு விட்டமின் டி சத்து முக்கியம்.

ஊறவைத்த வெந்தயம்

தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் சிறிதளவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் 3 மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால்

எந்த மருத்துவரும் இல்லாமல் கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகள் முற்றிலுமாக சரியாகி விடும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை தினமும் ஒரு ஸ்பூன் அளவு பருகலாம். தேங்காய்ப் பாலுடன் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துகூட பருகலாம்.

கருப்பு எள் உருண்டை

பிசிஓடி போன்ற பிரச்னையை சரி செய்ய கருப்பு எள் உருண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் ஒரே ஒரு கருப்பு எள் உருண்டையை நொறுக்கு தீனியாக கூட சாப்பிட்டு வருவது நல்லது.

பூசணி விதைகள்

தினமும் ஒரு ஸ்பூன் அளவு பூசணி விதையை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

இந்த விதையை வறுத்தோ, பொடித்தோ ஜூஸ்ஸில் கலந்து குடிக்கலாம்.

பனக்கருப்பட்டி

பனக்கருப்பட்டியை அப்படியே ஒரு பீஸ் சாப்பிடலாம் அல்லது

ஜூஸ், ஸ்மூத்தி, தேங்காய்ப் பால் என எதிலும் கலந்து சாப்பிடலாம். இவை கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகளை நீக்க உதவும்.

நெல்லி ஜூஸ்

வாரம் 3-4 முறை 2 நெல்லிக்காய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் கருப்பட்டி கலந்து ஜூஸாக்கி குடித்து வருவது நல்லது. இதனால் கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

விளக்கெண்ணெய் மசாஜ்

தினமும் தொப்புளில் கொஞ்சம் விளக்கெண்ணெய் விடுவது நல்லது.

விளக்கெண்ணெயை தொப்புள், அடிவயிறு சுற்றி தடவிய பின் மெல்லிய துணியைப் போட்டு அதன் மேல் ஹாட் பேக் வைத்து ஒத்தடம் கொடுக்கவேண்டும். இதனை வாரம் 4 முறை செய்வது நல்லது.

குறிப்பு

துரித உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பிரச்னைகளான பிசிஓடி, சிஸ்ட், ஃபைப்ராய்ட் போன்ற அனைத்தும் வரும்.

20-30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. கல்லீரலையும் நன்றாக பார்த்துக் கொண்டால் விரைவில் பெண்கள் பிரச்னைகள் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *