பல் வெள்ளையாக இதை செய்து பாருங்கள்..!

white teeth

பல் வெள்ளையாக வைத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறோம் நம்முடைய முயற்சிக்கு ஏற்றல் போல் பல நிறுவனங்களும் தங்களுடைய பற்பசையை பயன்படுத்தினால் பற்கள் வெள்ளையாகும் என்று அவ்வப்போது விளம்பரம் செய்கின்றன.

நம் அனைவருக்கும் தங்களுடைய பற்கள் வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும். பற்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது.

பற்கள் நிறம் மாற காரணங்கள்

  • புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், தினமும் அடிக்கடி காபி குடிப்பது போன்றவையும் பற்களில் கரை ஏற்பட காரணமாக இருக்கிறது.
  • தடிமனான பிரஷ்ஷை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்.
  • உடல் பிரச்சனைகளால் அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ளுதல்.

பல் துலக்குதல்

ஒரு நாளைக்கு 2 முறையாவது பல் துலக்குங்கள். 2 முதல் 3 நிமிடங்களில் பற்களை துலக்கலாம். மேலும் வாயின் அனைத்து பகுதிகளையும், நாக்கையும் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் மீது படிந்திருக்கும் அழுக்குகளும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கின்றன.

பற்களை துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுத்து துலக்கக் கூடாது. தடிமனான நரம்பு உடைய பிரஷ்யை பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்களின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெயை ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் செல்லும் போது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் குறைந்து, பல் வெள்ளையாக காட்சியளிக்கும்.

ஆப்பிள் சீடர்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, அதனைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்கும். குறிப்பாக இந்த முறையை செய்த பின்னர் வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாம் : நோய்களுக்கு நோ சொல்லும் பனங்கருப்பட்டி

மஞ்சள்

மஞ்சள் பற்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு மஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு வாரம் 1 முறை பற்களை துலக்க வேண்டும். முக்கியமாக இந்த முறையை அன்றாடம் பயன்படுத்தினால், பற்கள் சென்சிடிவ் ஆகிவிடும். ஆகவே தினமும் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு பற்களை துலக்கினாலும், பற்கள் வெள்ளையாகும்.

ஆப்பிள்

ஆப்பிளை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வலிமையுடனும், வெள்ளையாகவும் இருக்கும்.

தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

ஆரஞ்சு தோல்

இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.

இதையும் படிக்கலாம் : பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கா? இந்த பழங்கள் போதுமே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *