
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.
வரலாறு
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
28ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கொண்டாடும் முறை
தேசியத் தலைநகரில்
நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
தலைநகர் டெல்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
மாநிலத் தலைநகரங்களில்
மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு விருந்தினர்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
ஆண்டு | விருந்தினர் | நாடு | குறிப்பு |
1950 | அதிபர் சுகர்ணோ | இந்தோனேசியா | |
1951 | — | ||
1952 | — | ||
1953 | — | ||
1954 | மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக் | பூட்டான் | |
1955 | கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மது | பாகிஸ்தான் | ராஜ்பத்தில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட முதல் விருந்தினர் |
1956 | — | ||
1957 | — | ||
1958 | மார்ஷல் யெ ஜியாங்யிங் | சீனா | |
1959 | — | ||
1960 | அரசுத்தலைவர் கிளெமென்ட் வொரொசிலோவ் | சோவியத் ஒன்றியம் | |
1961 | ஐக்கிய இராச்சியத்தின அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத | ஐக்கிய ராஜ்ஜியம் | |
1962 | — | ||
1963 | மன்னர் நொரடோம் சீயனூக் | கம்போடியா | |
1964 | — | ||
1965 | உணவு,வேளாண் அமைச்சர் இராணா அப்துல் அமீது | பாகிஸ்தான் | |
1966 | — | ||
1967 | — | ||
1968 | பிரதமர் அலெக்சி கோசிகின் | சோவியத் ஒன்றியம் | |
அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ | யுகோசுலாவியா | ||
1969 | பிரதம மந்திரி தொடோர் ஷிவ்கோவ் | பல்கேரியா | |
1970 | — | ||
1971 | அதிபர் யூலியசு நெரெரெ | தன்சானியா | |
1972 | அதிபர் சீவூசாகர் ராம்கூலம் | மொரிஷியஸ் | |
1973 | அதிபர் மொபுட்டு செசெ செக்கோ | காங்கோ | |
1974 | அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ | யுகோசுலாவியா | |
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா | இலங்கை | ||
1975 | அதிபர் கென்னத் கவுண்டா | சாம்பியா | |
1976 | பிரதம மந்திரிஜாக் சிராக் | பிரான்ஸ் | |
1977 | முதல் செயலாளர் எட்வர்டு கீரெக் | போலந்து | |
1978 | அதிபர் பாட்றிக்கு இல்லேரி | அயர்லாந்து | |
1979 | பிரதம மந்திரி மால்கம் பிரேசர் | ஆஸ்திரேலியா | |
1980 | அதிபர் வாலெரி கிசுக்கார்டு டி’எசுடைங் | பிரான்ஸ் | |
1981 | அதிபர் ஒசே லோபசு போர்டில்லோ | மெக்சிக்கோ | |
1982 | மன்னர் முதலாம் வான் கார்லோஸ் | ஸ்பெயின் | |
1983 | அதிபர் செகூ சாகரி | நைஜீரியா | |
1984 | மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் | பூட்டான் | |
1985 | அதிபர் ரௌல் அல்பான்சின் | அர்ஜென்டினா | |
1986 | பிரதம மந்திரி ஆண்ட்ரியாஸ் பாப்பாண்ட்ரூ | கிரீஸ் | |
1987 | ஆலன் கார்சியா | பெரு | |
1988 | சனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | இலங்கை | |
1989 | பொதுச்செயலாளர் நுயென் வான் லின் | வியட்நாம் | |
1990 | பிரதம மந்திரி அனெரூட் ஜக்நாத் | மொரிஷியஸ் | |
1991 | அதிபர் மாமூன் அப்துல் கயூம் | மாலத்தீவு | |
1992 | அதிபர் மரியோ சோரெஸ் | போர்ச்சுகல் | |
1993 | பிரதமர் ஜான் மேஜர் | ஐக்கிய ராஜ்ஜியம் | |
1994 | பிரதமர் கோ சோக் டோங் | சிங்கப்பூர் | |
1995 | அதிபர் நெல்சன் மண்டேலா | தென்னாப்பிரிக்கா | |
1996 | அதிபர் பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ | பிரேசில் | |
1997 | பிரதமர் பாஸ்டியோ பாண்டே | டிரினிடாட் மற்றும் டொபாகோ | |
1998 | அதிபர் ஜாக் சிராக் | பிரான்ஸ் | |
1999 | மன்னர் பிரேந்திரா | நேபாளம் | |
2000 | அதிபர் ஒலுஸ்குன் ஒபசன்ஜோ | நைஜீரியா | |
2001 | அதிபர்அப்தெலாஜிஸ் பௌட்ஃபிலிகா | அல்ஜீரியா | |
2002 | அதிபர் காசம் உடீம் | மொரிஷியஸ் | |
2003 | பிரதமர் முகமது கதாமி | ஈரான் | |
2004 | அதிபர் லுலா ட சில்வா | பிரேசில் | |
2005 | மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் | பூட்டான் | |
2006 | மன்னர் சவூதி அரேபியாவின் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அசீஸ் | சவூதி அரேபியா | |
2007 | அதிபர் விளாதிமிர் பூட்டின் | ரஷ்யா | |
2008 | அதிபர் நிக்கொலா சார்கோசி | பிரான்ஸ் | |
2009 | அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ் | கஜகஸ்தான் | |
2010 | அதிபர் லீ மியுங் பாக் | தென் கொரியா | |
2011 | அதிபர் சுசீலோ பாம்பாங் யுதயோனோ | இந்தோனேசியா | |
2012 | பிரதமர் யிங்லக் சினாவத்ரா | தாய்லாந்து | |
2013 | மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் | பூட்டான் | |
2014 | பிரதமர் சின்சோ அபே | ஜப்பான் | |
2015 | அதிபர் பராக் ஒபாமா | ஐக்கிய அமெரிக்கா | அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர். |
2016 | அதிபர் பிரான்சுவா ஆலந்து | பிரான்ஸ் | |
2017 | பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் | ஐக்கிய அரபு அமீரகம் | |
2018 | சுல்தான் ஹஸனல் போல்கியா | பஹ்ரைன் | |
பிரதமர் ஹுன் சென் | கம்போடியா | ||
அதிபர் ஜோக்கோ விடோடோ | இந்தோனேசியா | ||
பிரதமர் தோங்லோன் சிசோலித் | லாவோஸ் | ||
பிரதமர் நஜீப் ரசாக் | மலேசியா | ||
மாநில ஆலோசகர் ஆங் சான் சூச்சி | மியான்மர் | ||
அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தெ | பிலிப்பீன்சு | ||
பிரதமர் லீ சியன் லூங் | சிங்கப்பூர் | ||
பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா | தாய்லாந்து | ||
பிரதமர் நுகுயென் சுவான் புக் | வியட்நாம் | ||
2019 | அதிபர் சிறில் ரமபோசா | தென்னாப்பிரிக்கா | |
2020 | பிரேசில் அதிபர் ஜயர் போல்சனரோ | பிரேசில் |
இதையும் படிக்கலாம் : இந்திய அடிப்படை சட்டங்கள் தெரியுமா…?