காமாட்சி 108 போற்றி

காமாட்சி 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் உச்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கம்.

காமாட்சி 108 போற்றி

மாங்காட்டில் வாழ்பவளே     காமாட்சி!

மகிமையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி!

பஞ்சாக்நி மத்தியிலே     காமாட்சி!

பரமனுக்குத் தவமிருந்த     காமாட்சி!

 

காஞ்சியிலே கோயில்கொண்ட     காமாட்சி!

கல்யாணக் கோலம்பூண்டாய்     காமாட்சி!

சங்கரரும் பூஜை செய்த     காமாட்சி!

சக்கரத்தில் உறைந்திட்ட     காமாட்சி!

 

அர்த்தமேரு அலங்கரிக்கும்     காமாட்சி!

அண்டி னோரைக் காக்கின்ற     காமாட்சி!

காஞ்சிமுனி சேவிக்கும்     காமாட்சி!

கண்கண்ட தெய்வமம்மா     காமாட்சி!

 

பஞ்சலோக வடிவினியே     காமாட்சி!

பக்தர் துயர் தீர்த்திடுவாய்     காமாட்சி!

ஆடிப்பூர தினத்தினிலே     காமாட்சி!

ஆனந்தமாய் வீற்றிருப்பாய்     காமாட்சி!

 

பங்குனிநல் உத்திரத்தில்     காமாட்சி!

பரமனைநீ மணங்கொண்டாய்     காமாட்சி!

கரும்போடு காட்சிதரும்     காமாட்சி!

கருணையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி!

 

கிளியோடு காட்சிதரும்     காமாட்சி!

கிருபைநீயும் செய்திடுவாய்     காமாட்சி!

சாந்தமாக காட்சி தரும்     காமாட்சி!

சந்தானம் தந்திடுவாய்     காமாட்சி!

 

சூதவனம் கோவில் கொண்ட     காமாட்சி!

சூதுகளை அகற்றிடுவாய்     காமாட்சி!

இடப்புறத்தில் அமர்ந்திட்ட     காமாட்சி!

இன்பமெல்லாம் தந்திடுவாய்     காமாட்சி!

 

ஆறுவாரப் பூஜை ஏற்பாய்     காமாட்சி!

ஆதிகாமாட்சியும் நீயே     காமாட்சி!

முதல்வாரப் பூஜையிலே     காமாட்சி!

நம்குறைகள் அறிந்திடுவாள்     காமாட்சி!

 

இரண்டாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!

இன்னல்களைப் போக்கிடுவாள்     காமாட்சி!

மூன்றாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!

மூன்றுவரம் தந்திடுவாள்     காமாட்சி!

 

நான்காம் வாரப் பூஜையிலே     காமாட்சி!

நலன்கள்பல தந்திடுவாள்     காமாட்சி!

ஐந்தாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!

ஐயங்களைப் போக்கிடுவாள்     காமாட்சி!

 

ஆறாம்வாரப் பூஜையிலே     காமாட்சி!

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள்     காமாட்சி!

மாவடியில் வசித்தவளே     காமாட்சி!

மனக்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!

 

தாம்பூலம் ஏற்றிடுவாள்     காமாட்சி!

தாயாகக் காத்திடுவாள்     காமாட்சி!

கற்பூரம் ஏற்றிடுவேன்     காமாட்சி!

கலிதெய்வம் நீதானே     காமாட்சி!

 

புஷ்பமாலை ஏற்றிடுவாள்     காமாட்சி!

புண்ணியங்கள் தந்திடுவாள்     காமாட்சி!

காய்ச்சிட்ட பாலுடனே     காமாட்சி!

கற்கண்டும் ஏற்றிடுவாள்     காமாட்சி!

 

ஏலக்காய் தேனுடனே     காமாட்சி!

ஏழைகளின் துயர் தீர்ப்பாய்     காமாட்சி!

எலுமிச்சம் பழம் ஏற்பாள்     காமாட்சி!

எம்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!

 

மாலையாக காட்சிதரும்     காமாட்சி!

பாசமுடன் காத்திடுவாள்     காமாட்சி!

மங்களமாய் காட்சி தரும்     காமாட்சி!

மங்களமாய் வாழவைப்பாள்     காமாட்சி!

 

உத்யோகம் தந்திடுவாள்     காமாட்சி!

உன்னடியே சரணமம்மா     காமாட்சி!

அன்னை உனை வேண்டி நின்றேன்     காமாட்சி!

ஆதரிப்பாய் என்னையும் நீ     காமாட்சி!

 

மாங்கல்யம் தந்திடுவாள்     காமாட்சி!

மக்களையும் காத்திடுவாள்     காமாட்சி!

மணாளனைத் தந்திடுவாள்     காமாட்சி!

மழலைகளும் தந்திடுவாள்     காமாட்சி!

 

தூளிகளை ஏற்றிடுவாள்     காமாட்சி!

துன்பங்களைத் துடைத்திடுவாள்     காமாட்சி!

வெற்றிகளைத் தந்திடுவாள்     காமாட்சி!

வேதனைகள் போக்கிடுவாள்     காமாட்சி!

 

வேழமுகம் நாயகன் தாய்     காமாட்சி!

வேல்முருகன் அன்னையும் நீ     காமாட்சி!

குருநாதர் காட்டிட்ட     காமாட்சி!

குவலயத்தோர் கொண்டாடும்     காமாட்சி!

 

அகிலாண்ட நாயகியே     காமாட்சி!

அன்பர்குறை தீர்த்திடுவாள்     காமாட்சி!

ஆவின்பால் குடித்தவளே     காமாட்சி!

ஆனந்தம் தந்திடுவாள்     காமாட்சி!

 

சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்     காமாட்சி!

சீக்கிரமே அருள்தருவாய்     காமாட்சி!

கெஞ்சுகிறேன் உன்னையம்மா     காமாட்சி!

கீர்த்தியுடன் வாழவைப்பாய்     காமாட்சி!

 

கரம்கூப்பி வணங்குகிறேன்     காமாட்சி!

வரம் அனைத்தும் தந்திடுவாய்     காமாட்சி!

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள்     காமாட்சி!

நீதிகளைத் தந்திடுவாள்     காமாட்சி!

 

வறுமைகளை ஓட்டிடுவாள்     காமாட்சி!

வாழ்வுதந்து காத்திடுவாள்     காமாட்சி!

அர்ச்சனைகள் ஏற்றிடுவாள்     காமாட்சி!

அகத்தினிலே குடியிருப்பாள்     காமாட்சி!

 

குழந்தை நானும் மனம் மகிழ     காமாட்சி!

குமரனுடன் காட்சி தாராய்     காமாட்சி!

அன்னை தந்தை தெய்வம் நீயே     காமாட்சி!

அருள்வடிவாம் குருநீயே     காமாட்சி!

 

மடிசாரில் காட்சிதரும்     காமாட்சி!

மனவினைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!

கடும்தபசு புரிந்திட்ட     காமாட்சி!

கவலைகளைக் களைந்திடுவாள்     காமாட்சி!

 

காமகோடி ஈஸ்வரியே     காமாட்சி!

காத்திருந்து வரமளிப்பாய்     காமாட்சி!

காஞ்சிமுனி வேண்டிநிற்கும்     காமாட்சி!

காலமெல்லாம் காத்தருள்வாய்     காமாட்சி!

இதையும் படிக்கலாம் : அம்மனின் 51 சக்தி பீடங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *