போகி பொங்கலுக்கு வீடுகளில் காப்பு கட்டுவது ஏன்?

போகி என்றால் போக்குதல். நம்மிடையே உள்ள தீய எண்ணங்களை ஒழிப்பது என்று அர்த்தம். வீட்டிலிருந்து தேவையற்ற பொருட்களை அகற்றவும். அறுவடைத் திருவிழாவின் முதல் நாளில் பழைய குப்பைகளை அகற்றி வீட்டை அழகுபடுத்த வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது பழமொழி. போகி தினத்தன்று இறைவனுக்குப் போளி, வடை, பாயசத்தை படைக்கலாம்.

காப்பு கட்டு

வீடுகளில் காப்புக் கட்டுவர். காப்புக்கட்டு மூலிகைகள் நிரப்பப்பட்ட முதலுதவி பெட்டிகள் அக்கால முதலுதவி பெட்டிகள். விஷக்கடி, ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான பிரச்சனைகளை சமாளிக்க தேவையான மூலிகைகளை வீட்டில் தயாராக வைப்பது தான் காப்பு கட்டு.

காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. பிரண்டை, தும்பையை காலப்போக்கில் விட்டு விட்டனர்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஜனவரி மாதம் மழைக்காலம் முடிந்து குளிர் அதிகமாகி, நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் அதிகம். எனவே, வீட்டில் மஞ்சள் மற்றும் பசுவின் சாணம் தூவி, தூபத்தை வைக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் முதல் நாள் என்பதால், பூமியின் அடிப்டையிலும் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும். இது குளிர்காலத்தின் முடிவையும் கோடையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

இதனால் நல்ல நேரம் பார்த்து காப்பு கட்டுவர். இந்த காப்புக்கள் வீடுகளில் நுழைவாயில், சமையலறைகள் மற்றும் வீட்டின் மற்ற அறைகளில் காப்பு வைப்பார்கள்.

இந்த மூலிகைகளை காப்பாக கட்டுவதன் மூலம் திடீரென்றும், எதிர்பாராமல் ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, விஷம் போன்ற நோய்கள் ஏற்பட்டால், இந்த மூலிகைகளை எடுத்து மருந்தாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் முன்னோர்களின் செயல்களின் பலன்களை அறிந்து அதை கடைபிடிப்போம்.

தைத்திருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாம் : தைப்பொங்கல் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *