கொங்கைகள் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 50 

கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய டைந்தகுழல் – வண்டுபாடக்

கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் – கெந்துபாயும்

வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் – கொண்டுமேலாய்

வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ – டண்டஆளாய்

சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென – வந்தசூரர்

சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை – கொண்டவேலா

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு – மெங்கள்கோவே

சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் – தம்பிரானே.

இதையும் படிக்கலாம் : கொங்கைப் பணை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 51

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *