குங்கும அர்ச்சனை பாடல் வரிகள்..!

குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்

சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்

பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம்

கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்

மனதால் எப்போதும் நினைப்பவர்க்கு அம்பாள்
மாங்கல்ய பாக்யம் கொடுப்பவளாம்

மும்முறை வலம் வந்து தொழுபவர்க்கு அம்பாள்
முன்நின்று காத்தருள் புரிபவளாம்

அடிமேல் அடிவைத்து அவளை வலம் வந்தால்
அஷ்ட சம்பத்தும் கொடுப்பவளாம்

கற்பூர ஜோதியை காண்பவர்க்கு அம்பாள்
கைமேல் பலன்களை கொடுப்பவளாம்
தீராத வினைகளை தீர்ப்பவளாம்

தேவி திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய
காலவி நாசினி காளி ஜெய ஜெய
சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய-துர்க்கா

இதையும் படிக்கலாம் : மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *